‘இப்படி செய்தால் அதுக்கு’… கர்ப்பமா இருக்கும் போது மலைஉச்சியில் வெறும்காலுடன் அமலாபால் செய்த செயல்.. வீடியோ வைரல்..

By Mahalakshmi

Updated on:

சிந்து சமவெளி, மைனா, வேலையில்லா பட்டதாரி, தெய்வ திருமகள் உள்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாகவலம் வந்தவர் அமலா பால். தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர் நடிப்பில் வெளியான ஆடை திரைப்படத்தில் ஆடை இல்லாமல் நடித்து சர்ச்சைக்கு உள்ளானார்.

   

மேலும் இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்; சில ஆண்டுகளுக்குப் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இதனைத் தொடர்ந்து மீண்டும் சினிமாவில் நடிக்க வந்த அமலா பால் தனது நெருங்கிய நண்பரான ஜெகத் தேசாய் லவ் ப்ரொபோஸ் செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது. இந்நிலையில், சமீபத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

இவர்களது திருமணம் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த தம்பதிகளுக்கு திருமணமான இரண்டு மாதங்களில் அமலா பால் கர்ப்பமாக இருப்பதாக ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அதனை தொடர்ந்து போட்டோ ஷூட் எடுத்தும் வெளியீட்டு தனது மகிழ்ச்சியை இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்.

இதற்கு பலரும் வாழ்த்துக்கள் கூறி வந்த நிலையில் தற்போது, அமலா பால் ஏதோ ஒரு மலையின் உச்சியில்  குத்த வச்சு சூரிய அஸ்தமனத்தைப் பிடிப்பது கர்ப்ப குமட்டலுக்கு சிறந்த சிகிச்சை. என் கால்கள் மணலையும் உப்புநீரையும் தொடும்போது அது ஒரு அதிசய குணமாகும். இது போன்று செய்தால் குழந்தைக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும் என்று வீடியோ மூலம் இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையதளத்தில் பரவி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)

author avatar
Mahalakshmi