
CINEMA
தனி ரேசார்டில் நண்பர்களுடன் செம்ம ஜாலியாக பிறந்தநாளை Celebrate செய்துள்ள ‘அருவி’ பட நடிகை(வீடியோ)…
நடிகை அதிதி பாலன் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் ‘அருவி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை துறையில் பிரபலமானார். ‘அருவி’ படத்தில் அருவி என்ற கதாபாத்திரத்தில் அசத்தியிருப்பார் அதிதி பாலன். இப்படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக நடித்து தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார் அதிதி. இப்படத்திற்கு பிறகு மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து தற்போது இவர் ‘சகுந்தலம்’ திரைப்படத்தில் சமந்தாவுடன் இணைந்து நடித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து தற்பொழுதும் இவர் பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை அதிதி பாலன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதுதொடர்பான விடியோவை அவரே தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்ய இதை பார்த்த ரசிகர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
View this post on Instagram