#image_title
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். தனது ரசிகர்களால் ‘கேப்டன்’ என்று கொண்டாடப்பட்டவர் .அரசியலிலும் சரி , சினிமாவிலும் சரி கால் பதித்து கலக்கிய இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஒரு சில ஆண்டுகளாக வே உடல் நலக்குறைவால் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி வைரலானது .இதைத் தொடர்ந்து நேற்று அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று திடீரென நடிகர் விஜயகாந்த் மரணம் அடைந்து விட்டார் என்ற மருத்துவமனை அறிக்கை வெளியாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. தற்பொழுது ஒட்டுமொத்த திரையுலகமும், ரசிகர்களும், அவரது தொண்டர்களும் கடும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். இதைத்தொடர்ந்து அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவர் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட திரைபிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் இன்று மாலை 4.30 மணி அளவில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திலேயே விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது நடிகர் விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை அண்ணாசாலையில் உள்ள தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் அங்கிருந்து இறுதி ஊர்வலமாக புறப்பட்டு கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தை அடைய உள்ளது. கேப்டனின் இறுதி ஊர்வலம் மக்கள் வெள்ளத்தில் , மக்கள் கதறலுடன் தொடங்கியுள்ளது. இதோ அந்த வீடியோ…
அண்மையில் குடியிருப்புப் பூங்கா ஒன்றில் குரங்குகளுக்கு உணவு அளித்த பெண் ஒருவருக்கும், அங்குள்ள அண்டை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான…
தனது எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாடும் எண்ணெய் விற்க முடியாதவாறு எரிசக்தி…
பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கருப்பை வாய் புற்றுநோயை வேரறுக்கும் நோக்கில் கர்நாடக அரசு புதிய மக்கள் நலத் திட்டத்தைத்…
தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை…
தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும்…
சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…