#image_title
கடந்த 2014-ம் ஆண்டு ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சௌந்தர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கோச்சடையான் படம் வெளியானது.
கோச்சடையான் திரைப்படத்தை எடுப்பதற்காக மீடியா ஒன் நிறுவனத்தை சேர்ந்த முரளி என்பவர் ஆட் பீரோ நிறுவனத்தை சேர்ந்த அபிர்சந்திடம் 6.2 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார். இதற்கு நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் உத்தரவாத கையெழுத்து போட்டதாக கூறப்படுகிறது. கோச்சடையான் படம் எதிர்பார்த்த அளவில் லாபத்தை கொடுக்காத நிலையில், முரளியால், அந்த 6.2 கோடி ரூபாய் கடனை செட்டில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
#image_title
படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியதை தொடர்ந்தே, லதா ரஜினிகாந்த் உத்தரவாத கையெழுத்து போட்டுள்ளார். ஆனால் படம் நஷ்டத்தை சந்தித்ததால் முரளி அந்தப் படத்தை செட்டில் செய்யாத நிலையில் கடந்த 2015ம் ஆண்டில் லதா ரஜினிகாந்த் மீது 4 பிரிவுகளில் மோசடி புகார் கொடுக்கப்பட்டு வழக்கு விசாரணை பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 8 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து வருகிறது. நன்கு பிரிவுகளில் லதா ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் கர்நாடக நீதிமன்றத்தில் மேற்கொண்ட மேல்முறையீட்டு மனுவை தொடர்ந்து 3 வழக்குகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் மீதமுள்ள ஒரு வழக்கின் விசாரணை பெங்களூர் நீதிமன்றத்தில் நடந்த வந்தது.
#image_title
இந்நிலையில் வழக்கு விசாரணையில் லதா ரஜினிகாந்த் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று முன்னதாக நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து இன்றைய தினம் லதா ரஜினிகாந்த் நீதிமன்றத்தில் ஆஜரானார். விசாரணையில், அவருக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி உத்தரவிட நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஜனவரி 6-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
#image_title
அவர் நீதிமன்றத்திற்கு தலையில் முக்காடு போட்டபடி ஆஜராக சென்ற வீடியோ சமூக வலைதலங்களில் வைரலான நிலையில், இது குறித்து லதா ரஜினிகாந்த் விளக்கமளித்துள்ளார். அதாவது, எப்போதுமே வெளியே செல்லும் போது தலையில் முக்காடு இட்டு செல்வதாகவும், அதேப் போல் அன்று நீதிமன்றத்தில் ஆஜராகும் போது வெயில் அதிகரித்து காணப்பட்டதால், முக்காடு இட்டு சென்றதாகவும் கூறியுள்ளார்.
#image_title
அண்மையில் குடியிருப்புப் பூங்கா ஒன்றில் குரங்குகளுக்கு உணவு அளித்த பெண் ஒருவருக்கும், அங்குள்ள அண்டை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான…
தனது எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாடும் எண்ணெய் விற்க முடியாதவாறு எரிசக்தி…
பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கருப்பை வாய் புற்றுநோயை வேரறுக்கும் நோக்கில் கர்நாடக அரசு புதிய மக்கள் நலத் திட்டத்தைத்…
தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை…
தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும்…
சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…