பான் இந்தியா நடிகராக மாறி விட்ட நடிகர் விஜய் சேதுபதி தமிழில் மட்டுமின்றி தெலுங்கு இந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் உருவான டிரெயின் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இப்போது நடிகர் விஜய் சேதுபதி தெலுங்கு பட இயக்குனர் பூரி ஜெகநாதன் இயக்கத்தில் ஸ்லம்டாக் 33 டெம்பிள் ரோடு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்தியில் நித்திஷ் திவாரி இயக்கத்தில் ரன்வீர் கபூர் – சாய்பல்லவி நடித்துவரும் இராமாயணம் என்ற படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக ஒரு தகவல் பரவியது.
அதில் இராவணனின் தம்பி விபீஷணன் கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்க கமிட்டாகி இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனை நடிகர் விஜய் சேதுபதி மறுத்துள்ளார். ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி இதுகுறித்து கூறுகையில், நான் அந்த படத்தில் நடிக்கவில்லை. இதுபோன்ற தகவல் எப்படி பரவியது யார் சொன்னது? என்று கூட எனக்கு தெரியவில்லை என்று நடிகர் விஜய் சேதுபதி கூறியிருக்கிறார்.
மனித நடமாட்டம் உள்ள ஊருக்குள் திடீரென ஒரு முதலை நுழைவதைக் காணும்போது, என் மனதில் பெரும் அதிர்ச்சியும் அச்சத்துடன்கூடிய பரபரப்பும்…
திண்டுக்கல் பகுதியில் சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த நபர் ஒருவர், பத்தே நாட்களில் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்…
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹிமாஸ்ரீ போரோ (20) என்ற கல்லூரி மாணவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு…
பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள கயாபன்-இ-சிர் சையத், தோக் நாஜு பகுதியில் நடைபெற்ற 12 வயது சிறுமியின் கொடூரமான கொலை வழக்கில்…
மகாராஷ்டிர மாநிலம் பிவண்டி பகுதியில் இயங்கி வரும் பிரபல இனிப்புக் கடை ஒன்றில், பெரிய அண்டா பாத்திரத்தில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த…
உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் உள்ள கர்னைல்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பால்பூர் சௌகி பகுதியில் தொடர்ச்சியாக குற்றச்…