தமிழ் சினிமாவில் சுக்ரன் திரைப்படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானவர்தான் விஜய் ஆண்டனி. அதன் பிறகு வரிசையாக பல திரைப்படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசை அமைப்பாளராக வளம் வந்தார். இதனிடையே நான் என்ற திரைப்படம் மூலமாக சினிமாவில் நடிகராகவும் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்ற நிலையில் இவர் தன்னை ஒரு நடிகராக சினிமாவில் நிலை நிறுத்தினார்.
தொடர்ந்து இவருடைய நடிப்பில் வெளியான ரோமியோ, மழை பிடிக்காத மனிதன் மற்றும் ஹிட்லர் போன்ற திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. பிறகு பிச்சைக்காரன் 2 திரைப்படத்தில் நடித்த நிலையில் அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் ககனமார்கன் என்ற திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனிடையே அருண்பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் திரைப்படம் தான் சக்தி திருமகன். இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக த்ரிப்தி நடிக்க உள்ளார்.
இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. இதனைத் தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படியான நிலையில் விஜய் ஆண்டனி சமீபத்தில் ஒரு முடிவு எடுத்திருந்தார். அதாவது தற்போது கமிட்டாகி இருக்கும் படங்களை நடித்து முடித்துவிட்டு முழு நேரமாக மற்ற ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைக்க முடிவு செய்திருந்தார். நடிப்பிலிருந்து சற்று காலம் விலகி இசையமைப்பில் முழு கவனம் செலுத்தலாம் என்று முடிவு செய்திருந்தார்.
இப்படியான நிலையில் சமீபத்தில் ஜென்டில் உமன் என்ற திரைப்படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இயக்குனர் ஜோசுவா சேதுராமன் விஜய் ஆண்டனியை சந்தித்து கதையை கூறியுள்ளார். அந்தக் கதை விஜய் ஆண்டனிக்கு மிகவும் பிடித்துப் போக மீண்டும் ஹீரோவாக நடிக்கலாம் என்று முடிவு செய்துள்ளார். தற்போது இதற்கான ஆரம்ப கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் அரங்கேறி வரும் விவாதங்கள் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதில் திமுக சார்பில்…
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அடுத்த கீரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தேவி (45). இவரது மகள் சுவாதி (23). நேற்று தாய்…
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேலகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த செங்கல் மற்றும் சிமெண்ட் கற்கள் வியாபாரியான பூபதி (45) என்பவர்,…
த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி பெற்ற கழகம் தலைவர் விஜய் 108 இடங்களை மட்டுமே கைப்பற்றிய போதிலும்,…
தமிழக சட்டசபையில் காவலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசுக்கும் எதிர்க்கட்சியான திமுகவுக்கும்…
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவனை அவனுடன் படிக்கும்…