Categories: சினிமா

பாலா படத்தில் நடிக்க அஜித் நோ சொன்ன காரணம் இதுதானா.. பல வருட உண்மையை உடைக்கும் பிரபலம்..!

Spread the love

தமிழ் சினிமாவிற்கு புதுவிதமான திரைப்படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு பெயரை பெற்ற இயக்குனர் தான் பாலா. இவருடைய இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த திரைப்படம் தான் நந்தா. அதுவரை ஒரு சாதாரண நடிகராக இருந்த சூர்யாவுக்குள் புது ரத்தம் பாய்ச்சியது இந்த திரைப்படம் தான். இந்தப் படத்திற்கு பிறகு அவருடைய மார்க்கெட் டாப் லெவலுக்கு சென்று விட்டது. ஆனால் நந்தா திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது அஜித் தானாம். இவ்வளவு பெரிய ஹிட் கொடுத்த இந்த படத்தில் அஜித் ஏன் நடிக்கவில்லை என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து கொண்டிருக்கிறது. அஜித் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இறுதியாக இவர் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சினிமாவை தாண்டி கார் ரேசிலும் பங்கேற்று வரும் அஜித் சினிமாவை மட்டுமே நம்பி கிடையாது. இப்படி இருக்கையில் இவர் ஏன் பாலா படத்தில் நடிக்க மறுத்தார் என்பதற்கான காரணம் பற்றி ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு சமீபத்தில் அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதில், நந்தா திரைப்படம் அஜித் நடிக்க வேண்டிய படம் தான். நந்தா படத்தில் கதையை முதலில் அஜித் சார்கிட்ட தான் பாலா சொன்னாரு. அப்போ நான் பாலா சார் கூட இருந்தேன். ஆனால் 1 லைன் தான் கதை சொன்னார். கேட்டதுமே அஜித்துக்கு மிகவும் பிடித்து விட்டது. ஆனாலும் முழு கதையையும் கேட்க பாலா அதை சொல்லவில்லை.

அதனால் அஜித்துக்கு அடுத்த முறையும் முழு கதையையும் சொல்லவில்லை. பாலாவை பொறுத்தவரை நடிகர்களுக்கு முழு கதையையும் சொல்லி பழக்கம் இல்லை. கதை எழுதி வச்சிருக்கேன், அதுல கூட நிறைய மாற்றுவேன், 13வது சீன் 17வது சீனாக கூட மாறும். திடீர்னு முழுவதையும் மாற்றி விட்டு மறுபடியும் ஷூட்டிங் பண்ணுவேன் என்று பாலா கூறுவார். இதன் காரணமாக அஜித் மற்றும் பாலா இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மரியாதை நிமித்தமாக அந்த படத்தில் இருந்து அஜித் விலகிவிட்டார்.

அந்தப் படத்தில் அஜித் விலகியதும் சூர்யா உள்ளே வந்தார். அதுதான் சூர்யா ஓட வளர்ச்சியை. ஒருவேளை பாலா மற்றும் அஜித் காம்போ இருந்திருந்தால் வேறு மாதிரி படம் வந்திருக்கும். அஜித் மேலையும் தப்பு கிடையாது. அவர் படத்தின் முழு ஸ்கிரிப்ட்டையும் எதிர்பார்த்தாரு. பாலாவை பொறுத்தவரை சேது மற்றும் பிதாமகன் படங்களுக்கு யாருக்குமே முழு கதையையும் சொன்னது இல்லை. ஆனாலும் ஹிட் கொடுத்தாரு. இவங்களுக்குள்ள புரிதல் தான் ரொம்ப முக்கியம். இருவருமே வேறு வேறு ரயிலில் இருக்கும்போது ஆட்டோமேட்டிக்கா அது செட்டாகாது என்பது ரத்தினவேலு அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

Nanthini

Recent Posts

“200 ஆண்டுகளுக்குப் பின் பிறந்த பெண் குழந்தை…” மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் பிரம்மாண்ட வரவேற்பு… நெகிழ்ச்சி சம்பவம்…!!

மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த தஹிபாலே குடும்பத்தில் கடந்த நான்கு தலைமுறைகளாக, அதாவது சுமார் 200 ஆண்டுகளாக ஆண்…

3 minutes ago

மெரினா சாலையில் சட்டென நின்ற கான்வாய்….. முதல்வர் விஜய்யை நோக்கி பாய்ந்த கூட்டம்.. பதறிய கமாண்டோக்கள்… உச்சக்கட்ட பதற்றம்….!

சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் இன்று காலை தமிழக முதல்வர் விஜய்யின் கார் கான்வாய் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக…

4 minutes ago

“அவர் என்னுடைய கணவர்…” முதல் மனைவிக்கு ஷாக்… சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர்… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் தண்டரை மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு விமலா என்ற மனைவியுள்ளார். இந்நிலையில், கடந்த…

9 minutes ago

2 வயதில் குழந்தை…! அண்ணி மீது ஆசை… கொழுந்தனுடன் சேர்ந்து கணவரை தீர்த்து கட்டி நாடகமாடிய மனைவி… சினிமாவை மிஞ்சிய பயங்கர சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்தஷார் மாவட்டம் கேதல்பூர் பன்சௌலி கிராமத்தைச் சேர்ந்த சுமித் (35) என்பவர் ஆகஸ்ட் 31 அன்று…

30 minutes ago

அக்காவுடன் இருந்த போலீஸ்காரர்…! “கண்டித்த தங்கையின் முகத்தை சிதைத்து…” மாமனாருக்கு நடந்த கொடூரம்… பகீர் பின்னணி…!!

தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரியா (40). இவர் அப்பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்துள்ளார். இவரது அக்கா…

45 minutes ago

“வேறு பெண்ணுடன் தொடர்பு.. 17 வயது சிறுமியுடன் காதல்…” கடத்தி சென்று துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொன்ற காதலன்… நண்பருடன் வெறிச்செயல்… பகீர் பின்னணி…!!

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள புடவைக்கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். அவாத் புராவைச்…

55 minutes ago