பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநில அளவிலான ஆணழகன் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற திலீப்பிற்கும், அவரது ஜிம்மிற்கு பயிற்சி பெற வந்த 42 வயதான யோகிதா என்ற பெண்ணிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.
மேலும் நாளடைவில் யோகிதா தனது சுயரூபத்தைக் காட்டத் தொடங்கியுள்ளார். திலீப்பின் வீட்டைத் தனது பெயருக்கு எழுதி வைக்கக் கோரியும், சொத்துக்களைப் பறிக்கும் நோக்கிலும் அவர் தொடர் நெருக்கடி கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே போலீஸ் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, இருவரும் இனி சந்திக்கக் கூடாது என்று எழுதி வாங்கப்பட்டுள்ளது. இருப்பினும், யோகிதா விடாமல் திலீப்பிற்குத் தொல்லை கொடுத்து வந்ததால், மனமுடைந்த திலீப் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் திலீப்பின் தற்கொலை குறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், திலீப்பின் செல்போன் உரையாடல்களைக் கைப்பற்றியுள்ள போலீசார், யோகிதா மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு ரகசியக் காதலால் ஏற்பட்ட டார்ச்சர், ஒரு திறமையான இளைஞனின் உயிரைப் பறித்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமான ஜூலி அண்மையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் குறித்து…