CINEMA
சுப்பிரமணியபுரம் படத்தை பார்த்துவிட்டு தான் இந்தப் படத்தையே எடுத்தேன்.. பிரபல பாலிவுட் இயக்குனர் ஓபன் டாக்..!!
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களான பாலா மற்றும் அமீர் ஆகியோரின் திரைப்படங்களுக்கு உதவி இயக்குனராக பணியாற்றி அதன் பிறகு சுப்பிரமணியபுரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் சசிகுமார். இவர் தயாரித்து இயக்கிய சுப்பிரமணியபுரம் திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே இந்திய அளவில் கவனம் பெற்றார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் இயக்குனராக பல திரைப்படங்கள் இயக்கி சாதனை படைத்தார்.
அது மட்டுமல்லாமல் கதாநாயகனாக களம் இறங்கிய இவர் ஈசன் என்ற படத்தை இயக்கி வரவேற்பை பெற்றார். கதாநாயகனாக பல திரைப்படங்களில் சசிகுமார் நடித்து வந்தார். அதன்படி நாடோடிகள், சுந்தர பாண்டியன், குட்டி புலி, கிடாரி மற்றும் உடன்பிறப்பே உள்ளிட்ட திரைப்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை மக்களிடம் பெற்று சசிகுமார் பிரபல ஹீரோவாக தமிழ் சினிமாவில் திகழ்ந்தார். இறுதியாக இவரது நடிப்பில் வெளியான அயோத்தி திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் சசிகுமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பாலிவுட் இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யாப் பற்றி பேசியுள்ளார். முதலில் இவரைப் பற்றி எதுவும் தெரியாது எனவும் தன் நண்பன் ஒருமுறை கூறியபோதும் அதைப்பற்றி கேட்க விரும்பாத இவர் ஒரு நாள் அவரின் படத்தை ஸ்கிரீனில் பார்த்துக் கொண்டிருக்கும்போது இவரா அவர் என்று வியப்புடன் பார்த்தேன். ஒரு நாள் அவரை சந்திக்கும் போது சுப்பிரமணியம் திரைப்படத்தின் கேசட்டை கேட்டு வாங்கியதாகவும் அந்தப் படத்தை பார்த்த பிறகு தான் gangs of wazipur என்ற வெப் சீரிஸ் எடுத்ததாகவும் கூறினார். சுப்பிரமணியம் திரைப்படத்தின் முதல் பாதியை பார்த்துவிட்டு அவர் என்னை கட்டி தழுவினார். அது மட்டுமல்லாமல் இந்த வெப் சீரிஸ் வெளியாகும் போது reference என்ற இடத்தில் சுப்பிரமணியபுரம் என்பதையும் இயக்குனர் குறிப்பிட்டு குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.