பிரபல நடிகரான ராதாரவி ரகசிய ராத்திரி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் தனது திரைப்படத்தை தொடங்கினார். தமிழில் கே பாலச்சந்தரின் மன்மத லீலை படத்தில் தனது நடிப்பை வெளிப்படுத்தினார். முதன் முதலில் டி.ராஜேந்தர் இயக்கிய உயிர் உள்ளவரை உஷா என்ற திரைப்படத்தில் ராதா ரவி வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருப்பார்.
பின்னர் வைதேகி காத்திருந்தாள், உயர்ந்த உள்ளம், உழைப்பாளி, குரு சிஷ்யன், பூவெளி, சின்னத்தம்பி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றார். மேலும் ராதாரவியின் சகோதரியும், நடிகையுமான ராதிகா தயாரித்த செல்லமே என்ற தொலைக்காட்சி தொடரில் ராதாரவி நடித்திருந்தார். இவரது வில்லன் கதாபாத்திரம் மக்களை கவரும் முண்டம் மிரட்டலாக இருக்கும்.
இந்த நிலையில் தென்னிந்திய சினிமா சீரியல் டப்பிங் கலைஞர்கள் சங்கத்திற்கு 2024 ஆம் முதல் 2026 ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. மேலும் சங்கத்தின் தலைவராக இருக்கும் ராதாரவி மீண்டும் தலைவர் பதவிக்காக போட்டியிட்டுள்ளார். அதில் 662 வாக்குகளை பெற்று ராதாரவி மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில் அருகில் இருப்பவர்கள் உதவியுடன் காரில் இருந்து மெதுவாக கீழே இறங்கி நடக்க முடியாமல் ராதாரவி நடந்து வரும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் ஒரு காலத்தில் எப்படி இருந்த வில்லன் நடிகர் இப்போது வயது முதிர்வினால் இப்படி நடக்க முடியாமல் வருகிறாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.