Connect with us

CINEMA

4 படம் எடுத்த நீங்க கஷ்டப்படுங்க.. 365 படம் நடிச்ச நான் ஏன் கஷ்டப்படணும் என கேட்ட மம்முட்டி.. மனம் திறந்த இயக்குனர் ராம்..!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகளை கொடுத்து ரசிகர்களை அதிர்ச்சியில் மூழ்க வைப்பவர் இயக்குனர் ராம். கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ராம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் பேரன்பு. இந்த திரைப்படத்தில் கேரளா சூப்பர் ஸ்டார் மம்பட்டி கதாநாயகனாக நடித்திருந்தார். அவருடன் சேர்ந்து அஞ்சலி, அஞ்சலி அமீர், சரத்குமார், வடிவுக்கரசி, தங்க மீன்கள் சாதனா, சமுத்திரகனி, அருள்தாஸ், லிவிங்ஸ்டண்ட் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள்.

   

இந்த திரைப்படம் தமிழ், மலையாளம் என்று இரண்டு மொழிகளில் வெளியான நிலையில் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.  இப்படம் வெளியாகி சில ஆண்டுகள் ஆனாலும் இப்படம் குறித்து இயக்குனர் ராம் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். அதில் கூறியிருந்ததாவது “கொடைக்கானலில் ஒரு கரடு முரடான பகுதியில் படபிடிப்பு எடுக்கப்பட்டது. அந்த இடத்திற்கு கேரவன் செல்ல முடியாது.

நாம் தங்கி இருக்கும் இடத்திலிருந்து கிட்டதட்ட இரண்டு மூன்று மணி நேரம் டிராவல் செய்து அந்த பகுதிக்கு வர வேண்டும். முதலில் மிகவும் கஷ்டமாக இருந்தது. இந்த பயணத்தை பார்த்த மம்முட்டி உங்களுக்கு இது நான்காவது படம் அதனால் மிகவும் சிரமப்பட்டு எடுக்கிறீர்கள். ஆனால் நான் 365 படத்திற்கு மேல் நடித்து விட்டேன் நான் ஏன் இவ்வளவு சிரமப்பட வேண்டும் என்று கேட்டாராம். உங்களுக்கு விருப்பமில்லை என்றால் நாம் வேறு இடம் கூட பார்க்கலாம் என்று கூறினாராம்.

அதற்கு இல்லை இல்லை நான் நடித்து விடுகிறேன் என்று கூறினாராம் மம்முட்டி. இதையடுத்து இயக்குனர் ராம் தயாரிப்பாளர் உடன் கலந்து பேசி அவர் வரும்போது நம் சூட்டிங் எடுத்துக் கொள்ளலாம். அதுவரை நாம் அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறி இருக்கிறார். இதையடுத்து மறுநாள் எத்தனை மணிக்கு வர வேண்டும் என்றும் மம்முட்டி கூறியிருக்கிறார். அதற்கு சன்ரைசர் என ராம் பதிலளிக்க அங்கிருந்து சென்று விட்டாராம் மம்முட்டி.

#image_title

#image_title

#image_title

மறுநாள் காலையில் 5:45 மணிக்கு அவர்கள் வந்து பார்க்கும்போது 5.30 மணிக்கு வந்திருக்கிறார் மம்முட்டி. இதை பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டு போனாராம் இயக்குனர் ராம். இதனை அந்த பேட்டியில் இயக்குனர் ராம் பெருமையாக பேசியிருந்தார்.

author avatar
Mahalakshmi
Continue Reading

More in CINEMA

To Top