சினிமா உலகிலேயே தற்போது மலையாள சினிமாதான் சக்க போடு போட்டு வருகின்றது. தொடர்ந்து அடுத்தடுத்து சின்ன பட்ஜெட் படங்கள் 100 கோடி 150 கோடி என்று வசூல் செய்து மிகப் பெரிய சாதனையை படைத்து வருகின்றது. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு சூப்பர் ஹிட் என்று சொல்லும் அளவிற்கு எந்த திரைப்படமும் வெளியாகாத நிலையில் மலையாள திரைப்படங்கள் சக்க போட்டு வருவதால் தமிழ் சினிமா மிகவும் ஏக்கத்துடன் இருக்கின்றது.
கடந்த சில ஆண்டுகளாகவே மலையாள சினிமா மிகவும் சிறப்பான படைப்பை கொடுத்து வருகின்றது. கடந்த சில மாதங்களில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது கேரள மொழியை தாண்டி தமிழ், தெலுங்கு உள்ளிட மொழிகளிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான ‘2018’ என்ற திரைப்படம் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
அதை தொடர்ந்து இந்த வருடத்தின் முதலில் அதாவது பிப்ரவரி 9-ம் தேதி வெளியான பிரேமலு திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அதே மாதம் பிப்ரவரி 22ஆம் தேதி வெளியான மஞ்சுமேல் பாய்ஸ் திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதில் பெரும்பாலும் தமிழகத்தில் தான் அதிகம் இந்த திரைப்படம் வசூல் செய்திருக்கின்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து வெளியாகியிருந்த ஆடு ஜீவிதம் திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டு கொடுத்துள்ளது.
பிரித்திவிராஜ் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் உண்மை கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு படம். இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. கடைசியாக பகத் பாஸில் நடிப்பில் வெளியான ஆவேசம் திரைப்படமும் தற்போது 100 கோடி வசூலை கடந்துள்ளது. தொடர்ந்து ஐந்து படங்கள் மிகப்பெரிய சாதனை படைத்துள்ள நிலையில் மலையாள சினிமா இதனை கொண்டாடி திர்த்து வருகின்றது. ஆனால் தமிழ் சினிமாவில் முதல் வருடத்தில் பாதி முடிவடையப் போகும் நிலையில் இன்னும் ஒரு ஹிட்டு திரைப்படத்தைக் கூட கொடுக்கவில்லை என்பது தான் உண்மை.