Connect with us

CINEMA

அந்த ஹாலிவுட் படத்தின் அட்ட காப்பி.. பிரபாஸின் அடுத்த படத்துக்கு வந்த ஆப்பு.. அப்ப 500 கோடி நிலைமை..!

பிரபாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் கல்கி. இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோன், திஷா பக்தானி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். இந்த திரைப்படம் வருகிற ஜூன் 27ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த அறிவுப்பு போஸ்டரை பார்த்த ரசிகர்கள் ஹாலிவுட் படமான டூன்  திரைப்படத்தைப் போல இருப்பதாக கூறி வருகிறார்கள்.

   

நாக் அஸ்வின் இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது நடிகையர் திலகம் திரைப்படம். இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல ஆண்டுகளாக பிரபாஸை வைத்து பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக கல்கி திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். ஜூன் மாதம் இப்படம் வெளியாகும் நிலையில் முழுக்க முழுக்க இந்த திரைப்படம் டூன் என்ற திரைப்படத்தின் காப்பி என கூறி வருகிறார்கள்.

அது மட்டும் இல்லாமல் பிரபாஸ் நடிப்பில் வெளியான ஆதிபுரூஸ் திரைப்படம் ராமரின் அவதாரத்தை மையப்படுத்தி எடுத்தது. இந்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. 500 கோடி பட்ஜெட்டில் உருவான படம் 300 கோடி ரூபாய் கூட வசூல் செய்யாமல் பெரிய நஷ்டத்தை சந்தித்தது. இதைத்தொடர்ந்து விஷ்ணு பகவானின் கடைசி அவதாரமான கல்கி அவதாரத்தை வித்தியாசமாக எடுக்கிறேன் என்ற பெயரில் ஏதோ ஹாலிவுட் திரைப்படத்தின் ரீமேக்கை எடுத்து வைத்திருக்கிறார்கள் என்று பலரும் ட்ரோல் செய்து கூறி வருகிறார்கள்.

author avatar
Mahalakshmi
Continue Reading

More in CINEMA

To Top