சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் மணிகண்டன் காலா படப்பிடிப்பு தளத்தில் நடந்த சில விஷயங்களை பகிர்ந்துக்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, ஒருநாள் ரஜினி நடித்த படங்களில் யாருக்கு எந்த படம் பிடிக்கும் ஒரு டிஸ்கஷன் எங்களுக்குள் நடந்தது. அப்போது ரஜினி சாரும் எங்களுடன் இருந்தார். பாட்ஷா பிடிக்குமா, அண்ணாமலை பிடிக்குமா என்ற கேள்வி வந்த போது அங்கு இருந்த எல்லாருமே பாட்ஷா படம் பிடிக்கும் என்றனர்.
நான் மட்டும் அண்ணாமலை படம் பிடிக்கும் என்றேன். ஏன் ஏன் அண்ணாமலை படம் பிடிக்கும் பாட்ஷா பிடிக்காதா என்று என்னிடம் ரஜினி சார் கேட்டார். இல்லே சார் பாட்ஷாவும் பிடிக்கும். ஆனால் அதை விட அண்ணாமலை கிரேட் என்றேன். எப்படி சொல்றீங்க என்று கேட்டார்.
அதற்கு நான், பாட்ஷா படத்தில் ரகுவரன் வில்லன். அவரை கொன்னுட்டா படம் முடிஞ்சுரும் என்று எனக்கு தெரியும். ஆனா அண்ணாமலை படத்துல வில்லன் அவரோட பிரண்ட். கடைசியில் மன்னிச்சு நல்லா வாழ்ந்தவன் கெடக் கூடாதும்மான்னு சொல்லி அம்மா கிட்ட நண்பன் வீட்டை அண்ணாமலை கொடுத்துடறான். அப்போ அண்ணாமலை உன்னத நிலைக்கு போயிடறான்.
அதனால் அண்ணாமலை படம் ஹீரோ வில்லன் என்ற நிலையை தாண்டி ஒரு பிலாஸபியான ஒரு படமாக இருந்தது சார் என்று சொன்னேன். அதை கேட்டதும் எஸ் எஸ் அண்ணாமலை ரொம்ப நல்ல படம் என்று ரஜினியும் அதை ஏற்றுக்கொண்டார் என்று நடிகர் மணிகண்டன் அதில் கூறியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…