10 நாட்களை கடந்த ‘கேப்டன் மில்லர்’ – ‘அயலான்’.. தட்டு தடுமாறி 75 கோடியை தொட்ட படம் எது தெரியுமா..?

By Mahalakshmi

Published on:

பொங்கல் பண்டிகையை ஒட்டி  வெளியான முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. இந்த வகையில், பொங்கல் ரேஸாக ரசிகர்கள் மத்தியில் தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படமும்; சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படமும் களமிறங்கியது.

   

இந்த திரைப்பட ரேஸ்  மூலம் மக்கள் மத்தியில் தனுஷிற்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையான மோதலை பற்றி பேசப்பட்டிருந்தது. இந்த வகையில் திரையரங்குகளில் வெளியாகி 10 நாட்களை  கடந்த நிலையில் உலக அளவில் எவ்வளவு வசூல் பெற்றது  என்ற ரிப்போர்ட்டை படக்குழு அறிவித்துள்ளார்கள்.

இதில் நடிகர் சிவகார்த்திகேயன் குழந்தைகளின் நாயகன் என்பதால் குடும்பத்துடன் அயலான் படத்தை பார்ப்பார்கள் எனவும்; தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் இளைஞர் மத்தியில் நல்ல வரவேற்பு பெறும் என்றும்  எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பத்து நாட்கள் வசூல் ரிப்போர்ட்டை அறிவித்து மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் உலக அளவில் 70 கோடி வசூலை ஈட்டியது என்றும்; ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படம் உலக அளவில் 75 கோடியை ஈட்டியது என்றும் தகவல் வெளியாகி உள்ளது. எதிர்பார்த்த வசூல் இரண்டு திரைப்படத்திற்கு வரவில்லை என்று  படக்குழுவினர் பேசி வரும் நிலையில் இன்னும் வெற்றி நடை போட்டுக் கொண்டுள்ள இரண்டு திரைப்படங்களும் உலக அளவில் எவ்வளவு வசூல் பெறும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

author avatar
Mahalakshmi