Categories: சினிமா

அங்க தொட்டு இங்க தொட்டு தயாரிப்பாளர்கள் அடிமடியில் கைவைத்த அட்லீ… அல்லு அர்ஜுன் படத்துக்கு அட்வான்ஸே இத்தனை கோடியா…?

Spread the love

தமிழ் சினிமா மட்டுமின்றி உலக அளவில் சினிமா உலகில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக மாறி விட்டார் இயக்குனர் அட்லீ. அட்லீ – ஷாருக்கான் கூட்டணியில் வெளியான ‘ஜவான்’ திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற பாக்ஸ் ஆபிஸில் 1140 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது.

ஜவான் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து இருந்தார். அப்படத்தின் பாடல்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்று தாறுமாறு ஹிட் அடித்தது.  அதை தொடர்ந்து இயக்குனர் அட்லீயுடன் அல்லு அர்ஜுன், கூட்டணி சேர உள்ளார் என்றும் அப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்றும் கூறப்பட்டது.

நடிகர் அல்லு அர்ஜுன் தற்பொழுது ‘புஷ்பா 2’ படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஒரு புதிய ப்ராஜெக்ட்டில் ஒப்பந்தம் ஆகி உள்ளார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் மற்றும் மைத்திரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்க உள்ளனர்.  நடிகர் அல்லு அர்ஜுன் உடன் திரிஷா மற்றும் சமந்தா இருவரும் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

படத்தின் மொத்த பட்ஜெட் 400 கோடி முதல் 450 கோடி என்று கூறப்பட்டு வரும் நிலையில் , இதில் அட்லிக்கு மட்டும் 60 கோடி சம்பளமாம். மேலும் அவர் 10 கோடி அட்வான்ஸ் வாங்கி உள்ளார். இதுமட்டுமின்றி படத்தின் லாபத்தில் வேறு பங்கு கேட்டு உள்ளாராம். அங்க தொட்டு இங்க தொட்டு தயாரிப்பாளர்கள் அடிமடியிலேயே கைவைத்த அட்லீயை பார்த்து, என்ன செய்வதென்று தெரியாமல் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியில் உறைந்து தான் போயுள்ளனர்.

Begam

Recent Posts

BIG BREAKING: 16 திமுக அமைச்சர்கள் தோல்வி முகம்… அதிர்ச்சியில் ஸ்டாலின்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆளும் திமுக தரப்பிற்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இன்று காலை 9:30 மணி…

9 minutes ago

BIG BREAKING: சொந்தத் தொகுதியிலேயே பின்னடைவைச் சந்திக்கும் ஸ்டாலின்.. 1,000 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக மாஸ் முன்னிலை..!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில், வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் அவர் பின்னடைவைச் சந்தித்து வருவது அரசியல் வட்டாரத்தில்…

13 minutes ago

திமுக 49, அதிமுக 41.. ஆனால் தவெக 65… வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்திலேயே அதிர வைக்கும் தவெக…!!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்…

18 minutes ago

BREAKING: வில்லிவாக்கத்தில் ‘ஆதவ் அர்ஜுனா’ அதிரடி! தவெக முன்னிலையால் திணறும் திமுக, அதிமுக..!!

சென்னை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா முன்னிலை பெற்று வருகிறார். அவர்…

22 minutes ago

அரசு ஊழியர்களின் சாய்ஸ் ‘தவெக’..? ஒரத்தநாட்டில் முன்னிலையில் அரவிந்த் – ஆச்சரியத்தில் அரசியல் கட்சிகள்..!!

ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் அரவிந்த் தொடக்கத்திலிருந்தே முன்னிலை…

37 minutes ago

திராவிடக் கோட்டையில் ‘தளபதி’ ஆதிக்கம்: பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் அதிரடி முன்னிலை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வாக்கு…

40 minutes ago