#image_title
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் பான் இந்திய நடிகராக வலம் வருப்பவர் நடிகர் ப்ரித்விராஜ். இவர் 2002ல் வெளியான ‘நந்தனம்’ என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து பாரிஜாதம், மொழி, கண்ணாமூச்சி ஏனடா, நினைத்தாலே இனிக்கும், ராவணன், உறுமி உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானார்.
இவருக்கு 2006ல் சிறந்த நடிகருக்கான கேரள மாநில திரைப்பட விருதும் கிடைத்தது. இவர் நடிப்பில் வெளியான கடுவா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து பாலிவுட் திரைப்படமொன்றை முடித்த நடிகர் பிரித்விராஜ், பாகுபலி பிரபலம் பிரபாஸ் உடன் இணைந்து ‘சலார்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இறுதியாக இவர் நடிப்பில் தமிழில் வெளியான ‘ஆடுஜீவிதம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளிலும் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். தற்பொழுது நடிகர் பிரித்விராஜ் தனது அண்ணன் இந்திரஜித் அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இவரும் ஒரு நடிகர் தான். ஆனால் இது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தமிழில் சர்வம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். இந்நிலையில் இவரின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நடிகர் பிரித்விராஜின் அண்ணனா இவர்..? என்று ஆச்சரியமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சோழிங்கநல்லூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்று அக்கட்சியின்…
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து…
தமிழகச் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசியபோது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின்…
சட்டப்பேரவையில் கடந்த ஆட்சியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் விஜய், கடந்த 9, 10 மாதங்களாக நமது மாநிலத்தில்…
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…