Categories: சினிமா

புஷ்பா 2 வெற்றிக்கு பிறகு.. பிரபல தமிழ் இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் 200 கோடி வசூல் நாயகன் அல்லு அர்ஜுன்.!

Spread the love

தமிழில் ராஜா ராணி திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர்தான் அட்லீ. முதலில் எந்திரன் மற்றும் நண்பன் என்று ரஜினி மற்றும் விஜய் திரைப்படங்களுக்கு இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய நிலையில் அட்லி பின்னர் இயக்குனராக அவதாரம் எடுத்தார். அப்படி அவர் இயக்கிய முதல் திரைப்படம் தான் ராஜா ராணி. காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே தமிழ் சினிமாவில் தன்னை ஒரு இயக்குனராக அட்லீ நிலை நிறுத்தினார். திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

 

இந்தப் படத்திற்குப் பிறகு விஜயை வைத்து தெறி திரைப்படத்தை இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்த அட்லீ அடுத்ததாக விஜயுடன் இரண்டாவது முறையாக இணைந்து மெர்சல் திரைப்படத்தையும் இயக்கி மாபெரும் வெற்றி கொடுத்தார். அதன்பிறகு விஜயுடன் பிகில் திரைப்படத்தை இயக்கியிருந்தார். தொடர்ந்து நான்கு தமிழ் படங்களை இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்த அட்லி ஹிந்தியில் அறிமுகமானார். ஷாருக்கான் வைத்து ஜவான் திரைப்படத்தை அவர் இயக்கி இருந்த நிலையில் இந்த திரைப்படமும் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது.

இப்படி தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்த அட்லி தற்போது அல்லு அர்ஜுன் உடன் இணைந்துள்ளார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் அல்லு அர்ஜுன் நடிப்பில் இறுதியாக புஷ்பா 2 திரைப்படம் வெளியான நிலையில் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 1700 கோடி வசூல் செய்திருந்தது. இந்த படத்தில் அல்லு அர்ஜுனின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது. இப்படியான நிலையில் இயக்குனர் அட்லியுடன் இணைந்து நடித்த அல்லு அர்ஜுன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புஷ்பா 2 வெற்றிக்கு பிறகு பல முன்னணி இயக்குனர்கள் அல்லு அர்ஜுனை நோக்கி திரும்பி உள்ளனர். ஜவான் படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்த கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் திசையில் இந்த திரைப்படம் உருவாக உள்ள நிலையில் பான் இந்தியா படமாக ஆக்சன் கதையில் இந்த திரைப்படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படம் 400 கோடி பட்ஜெட்டில் உருவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Nanthini

Recent Posts

பல்லாயிரம் கால்கள்.. ஸ்தம்பித்த அமைச்சர்களின் போன்கள்….. CM விஜய் களமிறக்கிய அந்த ‘ரகசிய’ CUG திட்டம்… பதறிய கோட்டை…!

பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் நோக்கில் தமிழக அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ தொடர்பு எண்கள் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், அதுவே தற்போது புதிய…

3 minutes ago

திடீர் திருப்பம்…. “விஜய் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்.. கதறும் 4 மாஜி எம்.எல்.ஏ.க்கள்”… தவெக-வில் பெரும் பரபரப்பு…!

தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத சூழல் நிலவி வரும் நிலையில், அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 4…

8 minutes ago

2017 டூ 2026: ‘அந்த’ புண்ணியவான்கள் செய்த தவறு… ஸ்டாலின், எடப்பாடிக்கு நேருக்கு நேர் சவால் விட்ட விஜய்…. சட்டமன்றத்தில் வெடித்த ‘பண்டோரா பாக்ஸ்’…!

தமிழக சட்டமன்றத்தின் 17-ஆவது கூட்டத்தொடர் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் விவாதத்துடன் விறுவிறுப்பாக நிறைவடைந்துள்ளது. கூட்டத்தொடரின் இறுதி நாளான…

18 minutes ago

“உங்க அப்பாவைக் காணோமே”…. திமுகவினர் இல்லாத அவையில் விஜய் சொன்ன அந்த ‘குட்டிக்கதை’… சட்டசபையில் வெடித்த ‘பார்ட்டி ஃபண்ட்’ சர்ச்சை….!

தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டசபைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கி அனல்…

29 minutes ago

“ஓசி பஸ், 1000 ரூபாய் கேஸ்”…. 2017 முதல் 2026 வரை நடந்ததை வெளுத்து வாங்கிய விஜய்…  சட்டசபையில் ரெண்டு திராவிட கட்சிகளையும் ரவுண்டு கட்டிய  CM…!

தமிழக அரசியலில் புதியதொரு அத்தியாயத்தைத் தொடங்கி, முதலமைச்சராக அரியணை ஏறியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சட்டப்பேரவையில் ஆளுநர்…

48 minutes ago

“ஆமாம், எங்களுக்கு அது தெரியாது தான்”…. திமுக ஆட்சியின் 8 ஊழல்களை மேஜையைத் தட்டிப் பட்டியலிட்ட முதல்வர் விஜய்…. அனல் பறந்த சட்டமன்ற விவாதம்….!

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் சட்டம்-ஒழுங்கு மற்றும் நிதிநிலை குறித்த விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குத் தனது…

56 minutes ago