மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த மாநிலங்களவை எம்பிக்களான சுஷ்மிதா தேவ், சுகேந்து சேகர் மற்றும் பிரகாஷ் சிக் பராய்க் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர். மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் ஷமிக் பட்டாச்சார்யா முன்னிலையில் இவர்கள் தங்களை அதிகாரப்பூர்வமாக அக்கட்சியில் இணைத்துக் கொண்டனர். பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வை மற்றும் அவரது தலைமையிலான மத்திய அரசின் சிறப்பான செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர்கள் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து அம்மாநில அரசியலில் இந்த மாற்றம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த 3 எம்பிக்களின் ராஜினாமாவால் காலியாகும் மாநிலங்களவை இடங்களுக்கான இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதில், பாஜக சார்பில் தற்போதே கட்சியில் இணைந்துள்ள இந்த மூன்று பேருக்கே மீண்டும் போட்டியிட அதிக வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திரிணாமுல் காங்கிரஸின் முக்கிய முகங்களாக இருந்த இவர்கள், தற்போது பாஜகவில் இணைந்துள்ளது மேற்கு வங்க அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் குடியிருப்புப் பூங்கா ஒன்றில் குரங்குகளுக்கு உணவு அளித்த பெண் ஒருவருக்கும், அங்குள்ள அண்டை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான…
தனது எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாடும் எண்ணெய் விற்க முடியாதவாறு எரிசக்தி…
பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கருப்பை வாய் புற்றுநோயை வேரறுக்கும் நோக்கில் கர்நாடக அரசு புதிய மக்கள் நலத் திட்டத்தைத்…
தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை…
தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும்…
சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…