“ஐயோ முடியலப்பா சாமி… லோக்கல் ரயில் நெரிசலை பார்த்து அலறி அடித்து… ஓடிய கொரிய சுற்றுலாப் பயணி… இங்குள்ள மக்கள் மீது… ஆழ்ந்த மரியாதையை ஏற்படுத்தியது… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!”

Spread the love

தென் கொரியாவைச் சேர்ந்த செஜின் என்ற சுற்றுலாப் பயணி இந்தியாவில் பயணம் செய்து வரும் நிலையில், மும்பையின் புகழ்பெற்ற லோக்கல் ரயிலில் பயணித்து அனுபவம் பெற விரும்பியுள்ளார். இதற்காக தானே ரயில் நிலையத்திற்குச் சென்ற அவர், ரூ 170 கொடுத்து இரண்டு மணி நேர ரவுண்ட்-டிரிப் பயணச்சீட்டை வாங்கினார். ஆனால், ரயில் மேடைக்கு வந்து நின்றதும் பயணிகள் அதிவேகமாக முண்டியடித்துக்கொண்டு ஏறத் தொடங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த செஜின், முதல் முயற்சியிலேயே ரயிலில் ஏற முடியாமல் பின்வாங்கினார்.

தனது முயற்சியைக் கைவிடாமல், அடுத்த ரயிலுக்காகக் காத்திருந்து இரண்டாவது முறையும் ஏற முயன்றார். இருப்பினும், அப்போதும் கூட்ட நெரிசலையும் பயணிகளின் வேகத்தையும் சமாளிக்க முடியாமல் அவரால் ரயிலுக்குள் செல்ல முடியவில்லை. இதனால் ஏமாற்றமும் சோர்வும் அடைந்த அவர், லோக்கல் ரயிலில் பயணிக்கும் திட்டத்தைக் கைவிட்டு, இறுதியில் டாக்ஸி பிடித்துத் தனது பயணத்தைத் தொடர்ந்தார். இந்த முழு சம்பவத்தையும் வீடியோவாகப் பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், “மும்பை லோக்கல் ரயில் அனுபவம் எனக்கு இங்குள்ள மக்கள் மீது மிகுந்த மரியாதையை ஏற்படுத்தியுள்ளது” என்று செஜின் குறிப்பிட்டுள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள், மும்பை லோக்கல் ரயிலில் தினமும் பயணிக்கும் மக்களின் உழைப்பைப் பாராட்டியும், செஜினுக்கு அறிவுரைகளை வழங்கியும் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, கூட்ட நெரிசல் மிகுந்த அவசர நேரங்களில் பயணிப்பதைத் தவிர்க்குமாறும், புதிய இடங்களுக்குச் செல்லும்போது சக பயணிகள் அல்லது ரயில்வே ஊழியர்களின் உதவியைப் பெறுமாறும் பயனர்கள் அவருக்குப் பரிந்துரைத்துள்ளனர்.

Swetha

Recent Posts

தலைநகரில் கூடும் தென்மாநில முதல்வர்கள்… 19, 20 தேதிகளில் கோவளத்தில் ‘மெகா’ கூட்டம்… அமித்ஷா – விஜய் சந்திப்பு நடக்குமா? வெளியான தகவல்…!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களின் தலைமையில், தென்னிந்திய மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்கும் சிறப்பு மாநாடு வரும் 19 மற்றும்…

4 மணத்தியாலங்கள் ago

“காரை விட்டு இறங்குடா வெளியே”… ஆபாச லீலைகளில் ஈடுபட்ட நபரை… வெளுத்து வாங்கிய பெண்… அதிர்ச்சியில் உறைந்த EV சார்ஜிங் மையம்…!!

ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களுக்காக மின்சார காரை ஓட்டி வரும் பெண் ஒருவர், தனது காரை சார்ஜ் செய்வதற்காக நிறுத்தியிருந்த…

4 மணத்தியாலங்கள் ago

குஷியோ குஷி…! மகளிருக்கு அதிரடி ஜாக்பாட்..!! தலா 5 இலவச ஆடுகள்… யாருக்கெல்லாம் கிடைக்கும்?… அமைச்சர் கமலி முக்கிய அறிவிப்பு…!!

தவெக கட்சியின் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி, பெண்களுக்கு இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று…

4 மணத்தியாலங்கள் ago

BREAKING: 10 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வரலையா?… ₹10,000 அபராதம்… தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்ட பரபரப்பு உத்தரவு…!!

தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்படும்போது, பாதிக்கப்பட்டவர்களின் உயிரை விரைவாகக் காக்கும் நோக்கில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய மற்றும் கடுமையான…

4 மணத்தியாலங்கள் ago

“அட கொடுமையே… பணமா வேணாம்… என் கேம் அக்கவுண்ட்ல டாப்-அப் பண்ணுங்க?… AI மூலம் போலி போட்டோ அனுப்பி… தந்தையை மிரட்டிய சிறுவன்… உ . பி – யில் பரபரப்பு…!”

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், ஆன்லைன் கேமிங் அடிமைத்தனத்திற்குப் பணம் திரட்டுவதற்காக 17-18 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் தனது…

4 மணத்தியாலங்கள் ago

“காதல்னா இது தான்!”… ஜெர்மன் பெண்ணை கரம்பிடித்த பஞ்சாபி காதலன்… இணையத்தில் வைரலாகும் திருமண வீடியோ…!!

ஜெர்மனியைச் சேர்ந்த 30 வயதான பியா பிளாங்கர்மேன் மற்றும் பாதி பஞ்சாபி, பாதி ஜெர்மனியரான 42 வயதான ராபின் சிங்…

4 மணத்தியாலங்கள் ago