டல்லாஸ் நகரில் உள்ள கேத்ரின் பாடிஸ்டா என்பவரது வீட்டின் வரவேற்பறையில் உள்ள சோபாவில் அவரது வளர்ப்பு நாய் அமைதியாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. அப்போது திடீரென மேற்கூரையில் இருந்து லேசான சத்தம் கேட்டு, அது நகரத் தொடங்கியுள்ளது. விலங்குகளுக்கே உரிய ஆறாவது அறிவால் ஆபத்தை முன்கூட்டியே உணர்ந்த அந்த நாய், உடனடியாக சோபாவில் இருந்து எழுந்து சுதாரிப்புடன் அந்த அறையை விட்டு வெளியேறியது. அது வெளியேறிய அடுத்த சில நொடிகளிலேயே, அந்த அறையின் மேற்கூரை மொத்தமாக இடிந்து கீழே விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்து நடந்த சமயத்தில் வீட்டின் உரிமையாளரான கேத்ரின் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்தார். அவரது நண்பர் ஒருவர் அந்த நாயைப் பராமரித்து வந்துள்ளார். வீட்டில் பொருத்தப்பட்டிருந்த ‘ரிங்’ பாதுகாப்பு கேமராவில் இந்த முழு காட்சியும் பதிவாகியுள்ளது. கேத்ரின் வெளியூரில் இருந்து வந்து இந்த வீடியோவைப் பார்த்தபோது, தன் செல்லப் பிராணி நூலிழையில் உயிர் தப்பியதைக் கண்டு அதிர்ச்சியும் நிம்மதியும் அடைந்துள்ளார். மேற்கூரை இடிந்து விழுந்ததற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
இந்த அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. வீடியோவைப் பார்த்த பலரும் நாயின் அதிவேக சமயோசித புத்தியைப் பாராட்டி வருகின்றனர். “மனிதர்களை விட நாய் போன்ற விலங்குகளுக்குக் கேட்கும் திறன் நான்கு மடங்கு அதிகம் என்பதால், மேற்கூரை இடிவதற்கான அதிர்வை அது முன்கூட்டியே உணர்ந்து தப்பியுள்ளது” என நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து, அந்த நாய் பாதுகாப்பாக இருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
அண்டார்டிகாவின் ராஸ் தீவில் அமைந்துள்ள மவுண்ட் எரபஸ் என்ற உலகின் தெற்கே உள்ள மிகத் தீவிரமான எரிமலை, தினசரி தங்கம்…
திமுக முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக நிலுவையில் உள்ள சொத்துக்குவிப்பு மற்றும் முறைகேடு…
அரசியல் வட்டாரங்களில் தற்போது ஒரு புதிய பரபரப்பு தகவல் சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கிறது. திமுகவில் இருந்து விலகி, தமிழக வெற்றிக்…
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது குறித்து முதல்வர் விஜய் அவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள்…
மாதந்தோறும் தொடக்கத்தில் எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு விலையை மாற்றி அமைத்து வரும் நிலையில், இந்த மாதத் தொடக்கமான இன்று…
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்து வருவது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,…