Connect with us

CINEMA

‘எனக்கு 7 வயசு.. என் தங்கச்சிக்கு 5 வயசு.. என் அப்பா அப்ப தற்கொலை பண்ணிக்கிட்டாரு’… யாரும் தற்கொலை பண்ணிக்க கூடாது…! உருக்கமாக பேசிய விஜய் ஆண்டனி…!

தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளராக அறிமுகமாகி , தற்பொழுது நடிகராகவும் கலக்கி வருபவர் நடிகர் விஜய் ஆண்டனி. இவர் நடித்த ‘நான்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதோடு திரை உலகில் சிறந்த நடிகர் என்ற ஒரு அடையாளத்தையும் இவருக்கு ஏற்படுத்தித் தந்தது. இதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலப்படுத்தியது. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான பிச்சைக்காரன் 2 மற்றும் கொலை ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

   

நடிகர் விஜய் ஆண்டனியின் ஃபாத்திமா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மீரா, லாரா என்று இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.   17 வயது மகள் லாரா பிளஸ் டூ படித்து வரும் நிலையில் விஜய் ஆண்டனி தனது குடும்பத்துடன் டிடிகே சாலையில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றார். இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் மகள் இன்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று அதிகாலை 3 மணி அளவில் அவர் தனது அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் லாராவின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்த முதல் கட்ட விசாரணையில் லாரா இறப்பிற்கு ஆறு மாதத்திற்கு முன்பிருந்தே மனஅழுத்தத்திற்க்காக சிகிச்சை பெற்றுக் கொண்டு வந்திருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தற்பொழுது நடிகர் விஜய் ஆண்டனி யாரும் தற்கொலை செய்யாதீங்க என்று மேடையில் பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த வீடியோவில் அவர், ‘ ‘எனக்கு 7 வயசு. என் தங்கச்சிக்கு 5 வயசு. என் அப்பா அப்ப தற்கொலை பண்ணிக்கிட்டாரு. அது எவ்ளோ பெரிய வலின்னு எனக்கு மட்டும் தான் தெரியும். யாரும் தற்கொலை பண்ணிக்க கூடாது’ என உருக்கமாக பேசியுள்ளார். இதோ அந்த வீடியோ…

Continue Reading

More in CINEMA

To Top