எங்கப்பா என் பெயரையே காணோம்…!!! விருது வழங்கும் விழாவில் அசிங்கப்பட்ட லட்சுமி ராமகிருஷ்ணன்…!! வைரலான வீடியோவிற்கு சரியான பதிலடி..!!!

By Begam

Published on:

தமிழக அரசு சார்பில் ‘தமிழ்நாடு அரசின் மாநில விருது’ வழங்கும் விழா சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழா 13 ஆண்டுகளாக நடைபெறவில்லை. தற்போது பொறுப்பேற்றுள்ள அரசு இவ்விழாவினை சீரும் சிறப்புமாக நடத்தியுள்ளது.

   

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மு. பே. சாமிநாதன், மா. சுப்பிரமணியன், மேயர் பிரியா பாபு போன்றவர்கள்  கலந்து கொண்டு விருதுகளை வழங்கி சிறப்பித்துள்ளனர்.’சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியின் மூலம் மிக பிரபலம் அடைந்தவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் ‘உச்சிதனை முகர்ந்தால்’ திரைப்படத்தில் நடித்ததற்காக ‘சிறந்த குணசத்திர நடிகைக்கான விருது’ நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் விழாவுக்கு விருதை பெறுவதற்காக 5 மணிக்கு அவர் கலைவாணர் அரங்கத்திற்கு வந்திருந்தார். ஆனால் விழாவில் விருதுக்கான பட்டியலில் அவர் பெயர் இடம் பெறவில்லை . இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அங்கு இருந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு சண்டையிட்டதாக கூறப்பட்டது .

நடந்த தவற்றை விசாரித்த அதிகாரிகள் தவறை உணர்ந்து அதனை உடனடியாக சரி செய்ததாகவும், லட்சுமி ராமகிருஷ்ணனை சமாதானம் செய்ததாகவும்,  இதே போல் விடுபட்ட சிலரின் பெயர்களை சரி செய்து,  அவர்களுக்கான விருதையும் உடனே வழங்கியதாகவும் பிரபல செய்தி சேனல் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தது.

விருது பெற்ற லட்சுமி ராமகிருஷ்ணன் வீடியோ பதிவு ஒன்றை வெளியீட்டுள்ளார். அதில் அவர் ‘பல வருடங்கள் கழித்து இந்த விழா நடைபெற்றுள்ளது .தமிழ்நாடு அரசின் மாநில விருது விழாவில் எனக்கு கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் நிகழ்ச்சியின் அமைப்பாளர்கள் ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விழாவில் எனது பெயர் விருது வழங்கும் பட்டியலில் விடுபட்டிருந்தது. அதனை நான் சென்று அங்கிருந்த அதிகாரிகளிடம் கூறினேன். அவர்கள் தவறை உடனே சரி செய்தார்கள். என்னை போல் இன்னும் சில நபர்களின்  பெயரும் விடுபட்டிருந்தது. தவறுகள் சரி செய்யப்பட்டு உடனடியாக எங்களுக்கு விருது வழங்கப்பட்டது’என்று அந்த பதிவில் கூறியுள்ளார். மேலும் தவறான வீடியோவை வெளியிட்ட பிரபல செய்தி சேனலின் பெயரையும் அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார்.