Connect with us

CINEMA

“இளையராஜா போட்டோவ வச்சு கும்பிடணும்… வைரமுத்து வாயப் பொத்திகிட்டு இருக்கணும்”- கங்கை அமரன் ஆவேசம்!

இதுவரை 1500 படங்களுக்கு மேல் இசையமைத்து உலகிலேயே எந்தவொரு இசையமைப்பாளரும் படைக்காத சாதனையை நிகழ்த்தி தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவராக இருப்பவர் இளையராஜா. இப்போது 82 வயதாகும் நிலையிலும் வெற்றிமாறன் மற்றும் தியாகராஜன் குமாரராஜா உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார். அவரின் பயோபிக் இப்போது தனுஷ் நடிப்பில் உருவாக உள்ளது. அந்த படத்துக்கும் அவரே இசையமைக்க உள்ளார்.

இளையராஜாவோடு இணைந்து பாடல்களை உருவாக்கி காலத்தால் அழியாத பல இனிமையான பாடல்களைக் கொடுத்தவர் வைரமுத்து. 1980 ஆம் ஆண்டு இருவரும் நிழல்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற இது ஒரு பொன்மாலைப் பொழுது என்ற பாடலின் மூலம் இணைந்தார்கள். அதன் பிறகு இருவருக்கும் இடையிலான நட்பு அதிகமாகி அடுத்தடுத்த ஆண்டுகளில் இளையராஜா இசையில் அதிக பாடல்கள் எழுதியவராக இருந்தார். ஆனால் இந்த கூட்டணி ஒரு கட்டத்தில் பிரிந்தது.

   

அதற்குக் காரணம் இருவருக்கும் இடையிலான படைப்பு ரீதியிலான கருத்து வேறுபாடுதான் என்று சொல்லப்படுகிறது. அதன் பிறகு 35 ஆண்டுகளாக சினிமாவில் பணியாற்றி வந்தாலும் இணைந்து ஒரே ஒரு பாடல் கூட பணியாற்றவில்லை. பலரும் அவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்த போதும் அது நடக்கவில்லை.

இப்போது இளையராஜா தன்னுடைய பாடல்களுக்கான ராயல்டி தொடர்பான வழக்கு ஒன்றை நடத்தி வருகிறார். அதில் “பாடல்களின் முழு உரிமை யாருக்கு சொந்தம்? பாடல் வரிகளை எழுதியவர்களும் இதுபோல ராயல்டி கேட்டால் என்ன ஆகும்?” எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதையொட்டி வைரமுத்து ஒரு பட விழாவில் பேசும்போது “மொழியும் இசையும் சேர்ந்தால்தான் அது பாட்டு. அதைப் புரிந்தவன் ஞானி, புரியாதவன் அஞ்ஞானி. பாட்டுக்கு அடையாளம் பெற்றுத் தருவதே மொழிதான்” என இளையராஜாவைத் தாக்கி பேசினார்.

இந்நிலையில் வைரமுத்துவின் அந்த பேச்சுக்கு இப்போது இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் கோபமாக எதிர்வினையாற்றியுள்ளார். அதில் “வைரமுத்து அவர்களே வாயை மூடிக்கொண்டு இருங்கள். இளையராஜாவை பற்றி ஒரு வார்த்தைப் பேசக் கூடாது. அவர் எப்படி அவர் வேலையை பார்த்துக் கொண்டு இருக்கிறாரோ அப்படி நீங்களும் கூட்டம் போடுங்கள்… உங்கள் புத்தகத்தை வாங்கினால்தான் விழாவுக்கு வருவேன் என்று சொல்லுங்கள்… என்னமோ செய்துகொள்ளுங்கள். உங்களை வாழவைத்தவர்கள் பாரதிராஜவும் இளையராஜாவும். இளையராஜாவின் படத்தை வைத்து நீ தினமும் கும்பிடவேண்டும்” எனக் கூறியுள்ளார்.

Continue Reading

More in CINEMA

To Top