Connect with us

CINEMA

நான் தெலுங்கு படத்துல அந்த காட்சிய நாசூக்காக காப்பியடித்தேன்.. ஆனா அவங்க அப்படியே சுட்டுட்டாங்க- சுந்தர் சி பகிர்ந்த செம்ம மேட்டர்!

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக கமர்ஷியல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், வின்னர், கிரி, கலகலப்பு என ஏராளமான படங்கள் கமர்ஷியலாக பெருவெற்றி பெற்றுள்ளன.

இடையில் சுந்தர் சி நடிகராக தலைநகரம், நகரம் 2 என சில வருடங்கள் நடிப்பிலும் கவனம் செலுத்தினார். அதன் பின்னர் மீண்டும் இயக்குனரான அவர் அரண்மனை உள்ளிட்ட பேய்ப் படங்களை இயக்கியும் அதில் நடித்தும் வருகிறார்.

   

இந்நிலையில் இப்போது அவர் அளித்துள்ள ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ள தகவல் ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது. அதில் “என் சில படங்களை ரைட்ஸ் வாங்காமலேயே காப்பி அடித்துவிட்டனர். அந்த கோபத்தில் நான் இப்போது உங்க படத்தில இருந்து சுடுறேன் பாருங்க என 6 தெலுங்கு படங்களில் இருந்து சுட்டு உருவாக்கியதுதான் வின்னர்.

அந்த படத்தில் வடிவேலு கோலி குண்டில் சறுக்கி தூண்களில் மோதி விழுவது போல காட்சி இருக்கும். தெலுங்கு படத்தில் வாழைப்பழ தோலி வழுக்கி விழுவது போல மட்டும்தான் இருக்கும். நாங்கள் அதை அப்படியே காப்பி அடிக்கக் கூடாது என்று மாற்றினோம். படம் ரிலீஸாகி பெரிய வெற்றி பெற்றது.

அதன் பின்னர் நான் ஒரு நாள் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும் போது ஒரு காட்சி ஓடியது. அதில் வின்னர் படத்தில் வடிவேலு எப்படி விழுந்தாரோ அதை அப்படியே ஈயாடிச்சாங்காப்பியாக பிரம்மானந்தத்தை வைத்து எடுத்திருந்தார்கள். அப்போதுதான் நான் உங்களிடம் தோற்றுவிட்டேன். என்னால் உங்களை மாதிரி காப்பி அடிக்க முடியாது என ஒத்துக் கொண்டேன்” என ஜாலியாகப் பகிர்ந்துள்ளார்.

Continue Reading

More in CINEMA

To Top