Connect with us

தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை அறிவித்த youtube இர்ஃபான்.. சுகாதாரத்துறை நோட்டீஸ்.. 7 ஆண்டு சிறை தண்டனையா..?

CINEMA

தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை அறிவித்த youtube இர்ஃபான்.. சுகாதாரத்துறை நோட்டீஸ்.. 7 ஆண்டு சிறை தண்டனையா..?

தமிழகத்தில் பிரபல youtube-ராக வலம் வரும் இர்ஃபான் தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்ததால் சுகாதாரத்துறை அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ்நாட்டில் பிரபல youtube-ஆக வலம் வருபவர் முகமது இர்ஃபான். இர்பானுக்கு சொந்தமான இர்ஃபான்ஸ் வியூ என்கின்ற youtube சேனலை 35 லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்கிரைப்ர்கள் பின் தொடர்கிறார்கள்.

பல்வேறு இடங்களுக்கு சென்று பல்வேறு விதமான உணவுகளை சுவைத்து அதனை வீடியோவாக வெளியிட்டு பிரபலமானார் இர்பான். தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் வெளிநாடு உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று உணவுகளை சுவைத்து அதனை வீடியோவாக வெளியிடுவார். சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் நடைபெற்றது.

   

 

இவரது திருமணத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. திருமணத்திற்கு பிறகு தனது மனைவியுடன் சேர்ந்து வீடியோ வெளியிட்டு வந்தார் இர்பான். தனது மனைவி சமைக்கும் உணவுகள் அனைத்தையும் வீடியோவாக தனது youtube சேனல் பக்கங்களில் வெளியிட்டு வந்தார்.

சமீபத்தில் அவரது மனைவி கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருந்தார். தனக்குப் பிறகு போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை இர்பான் வெளிநாட்டில் பரிசோதனை செய்திருக்கின்றார். தனக்கு பிறகு போகும் குழந்தையின் பாலினம். இதுதான் என அவரது youtube சேனலில் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

இந்த வீடியோவை 20 லட்சத்துக்கு மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இந்நிலையில் இர்பானுக்கு விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. காவல்துறையிலும் இர்பான் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து சொல்லும் நபர்களுக்கு தமிழகத்தில் ஏழு ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும். இந்நிலையில் இவருக்கு தண்டனை அளிக்க வாய்ப்பு இருக்கிறதா? என்பது தெரியவில்லை.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top