Connect with us

CINEMA

4200 கோடி வசூல் கொடுத்த இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனர் இவர் தான்

ஒரு திரைப்படம் நன்றாக இருந்தால் அந்த நடிகரை தான் மக்கள் பாராட்டுவார்கள், இப்போது தான் சரியாக இயக்குனர்களை பாராட்ட தொடங்கியுள்ளனர் மக்கள். அதேபோல் நடிகர்கள் தான் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பார்கள், இயக்குனர்கள் யார் என்றே மக்களுக்கு தெரியாமல் இருக்கும். ஆனால் இப்போது அப்படி அல்ல, மக்கள் இயக்குனர்களையும் கண்டுகொள்ள தொடங்கி விட்டார்கள்.

SS Rajamouli

   

நடிகர்களை விட இயக்குனர்கள் சம்பளம் கம்மியாக வாங்கி வருகிறார்கள், அதில் பிரம்மாண்ட படங்களை கொடுத்த இயக்குனர்கள் மட்டும் விதிவிலக்கு. ஒரு படம் நன்றாக ஓடுகிறது என்றால் அதில் நடிகரை விட இயக்குனருக்கு தான் பங்கு அதிகம். இந்தியா சினிமாவில் பல இயக்குனர்கள் உள்ளார்கள், குறிப்பாக பிரம்மாண்ட இயக்குனர்கள் பலர் உள்ளார்கள். ஷங்கர், ராஜமவுலி, பிரசாந்த் நீல் என ஆரம்பித்து ஹிந்தியில் சஞ்சய் லீலா பன்சாலி, ரோஹித் ஷெட்டி, ஹிரானி என பலர் உள்ளனர்.

Rajamouli was the successful box office director

இவர்களை நம்பி 500 கோடி வரை நம்பி செலவழிக்கும் தயாரிப்பாளர்களும் உண்டு. ஆனால் போட்ட பணத்தை விட 10 மடங்கு லாபம் தரும் இயக்குனர் என்றால் அது எஸ்.எஸ்.ராஜமவுலி தான். இந்தியாவின் அதிக வசூலித்த படத்தின் இயக்குனர் என்ற பெருமை ராஜமௌலியை தான் சாரும். வெறும் 12 படங்கள் மட்டுமே இயக்கியுள்ள ராஜமௌலி திரையுலகிற்கு கிட்டத்தட்ட 4000 கோடி வசூலை கொடுத்துள்ளார்.

RRR and Bahubali

12 படங்கள் இயக்கியுள்ள ராஜமவுலியை இந்தியா முழுக்க தெரிய வைத்தது பாகுபலி படம் தான். ஆர்.ஆர்.ஆர் இவரை ஆஸ்கருக்கே அழைத்து சென்று விட்டது. ஆனால் அதற்கு முன்பே மகதீரா, ஈகா போன்ற படங்களை இயக்கி அசரவைத்தவர் ராஜமௌலி. பாகுபலி இரண்டு பாகங்களும் சேர்த்து 2400 கோடி வசூல் தந்தது. ஆர்.ஆர்.ஆர் வசூல் 1308 கோடி.

Magadheera and Eega

மகதீரா வசூல் 150 கோடி, ஈகா படத்தின் வசூல் 125 கோடி. ஆக இவர் மட்டும் தான் இவரின் படங்களால் 4251 கோடி வசூலை சினிமா உலகிற்கு தந்துள்ளார். ராஜமவுலி நம் இந்தியா சினிமா என்னும் கீரிடத்தில் ஒரு ராஜ மாணிக்கம் என்பதை மறுக்க முடியாது.

author avatar
Deepika
Continue Reading

More in CINEMA

To Top