நேஷனல் கிரஷ்-ஆக வளம் வரும் ராஷ்மிகா மந்தனா கடந்த 10 வருடங்களில் இந்தியா எப்படி மாறியிருக்கிறது என்பது குறித்து தனது சமூக வலைதள பக்கங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இது இணையத்தில் வைரலாகி வருகின்றது. பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட ராஸ்மிகா மந்தனா 2016 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான க்ரீக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
பின்னர் விஜய் தேவர் கொண்டாவுடன் ராஷ்மிகா நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டு கொடுத்தது. இதனால் ராஸ்மிகா முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார். பின்னர் டியர் காம்ரேட், புஷ்பா 2 திரைப்படங்கள் இவருக்கு சூப்பர் டூப்பர் கிட்டு கொடுத்ததால் தெலுங்கில் கொடிகட்டி பறக்கும் நடிகையாக மாறிவிட்டார்.
தமிழில் சுல்தான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் விஜய் உடன் வாரிசு திரைப்படத்தின் நடித்திருந்தார். தமிழில் அவர் பெரிய அளவு ஹிட் படங்களை கொடுக்கவில்லை என்றாலும் ஹிந்தியில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் ராஷ்மிகா மந்தனா குட்பை என்ற திரைப்படத்தில் நடித்தார். பின்னர் ரன்பீர் கபூருடன் அனிமல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் .
இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் 900 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. தற்போது சல்மான் கானை வைத்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கம் புதிய திரைப்படத்தில் கமிட் ஆகியிருக்கிறார். தமிழில் குபேரா என்கின்ற திரைப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்த வருகிறார். இந்நிலையில் மும்பையில் இருக்கும் கடல்பாளமான அடல் சேது பாலத்தில் செய்த பயணம் குறித்து பேசி இருந்தார் ராஷ்மிகா.
அடல் சேது பாலத்தில் பயணம் செய்தது தன்னால் மறக்க முடியாத ஒரு அனுபவம். அந்த பாலத்தால் என்னுடைய இரண்டு மணி நேர பயணம் 20 நிமிடங்களாக முடிந்தது. மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இப்படி ஒன்று சாத்தியமாகும் என யாரும் நினைக்கவில்லை. மும்பையிலிருந்து நவி மும்பைக்கு எளிதாக பயணம் செய்ய இந்த பாலம் உதவுகிறது.
கடந்த பத்து வருடங்களில் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து இருக்கின்றது என புகழ்ந்து பேசி இருக்கின்றார். இவரின் வீடியோவை பார்த்த பலரும் என்ன மோடியை பற்றி அவரது ஆட்சியைப் பற்றியும் இவ்வளவு புகழ்ந்து பேசி வருகிறார். அந்தக் கட்சியில் இணைந்து விட்டாரா? என்று பலரும் பலவித கமெண்ட்களை தெரிவித்து வருகிறார்கள்.