Connect with us

CINEMA

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அரங்கேறிய நெகிழ்ச்சி தருணம்… தனது தீவிர ரசிகையை சந்தித்து  ஆசையை நிறைவேற்றிய SK…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பல வருடங்களாக பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சி என்றால் அது ‘சூப்பர் சிங்கர்’ மட்டுமே. இது ஜூனியர், சீனியர் என்று இருபிரிவுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் வெள்ளி திரைக்கு சென்ற பாடகர்கள் ஏராளம். அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சி பிரபலமாக உள்ளது.

   

அது மட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். தொடர்ந்து மக்களிடம் கிடைத்த பேராதரவை கொண்டு 9 சீசன்கள் நிறைவடைந்து தற்பொழுது 10 வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. தற்பொழுது இந்த நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியான தருணம் ஒன்று அரங்கேறியுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் ஒருவர் தான் தன்ஷிரா. இவர் கேரளாவைச் சேர்ந்தவர். நடிகர் சிவகார்த்திகேயனைச் சந்தித்து பேச வெண்டும் என்ற ஆசையில் தமிழ் கற்றுக்கொள்ள ஆரம்பித்ததாகத் ஏற்கெனவே இந்நிகழ்ச்சியில் கூறியிருந்தார். தற்பொழுது தமிழில் எம்.ஏ.பட்டப்படிப்பைப் படித்து வருகிறார்.

இவரின் ஆசையை  அறிந்த நடிகர் சிவகார்த்திகேயன், அவரை நேரில் வரவைத்து அவருக்கு சர்ப்ரைஸ் தந்துள்ளார். இந்த வீடியோவானது  இந்த வார நிகழ்ச்சியில் ஒளிபரப்பாக உள்ளது. தனது ரசிகையை சந்தித்து அவரின் தீவிர ஆசையை நிறைவேற்றிய நடிகர் சிவகார்த்திகேயனின் இந்த செயலானது நெட்டிசன்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது. இதோ அந்த வீடியோ…

Continue Reading

More in CINEMA

To Top