Connect with us

CINEMA

17 வயதில் முதல் திருமணம், 77 வயதில் 4-வது திருமணம்.. பலரும் அறியாத காதல் மன்னன் ஜெமினி கணேசனின் சர்ச்சை மிகுந்த பர்சனல் லைஃப்..

காதல் மன்னன் என்று தமிழ் சினிமாவில் அழைக்கப்பட்டவர் நடிகர் ஜெமினி கணேசன். திருச்சி புதுக்கோட்டையில் பிராமண குடும்பத்தில் பிறந்த அவரது இயற்பெயர் கணேசன்தான். டாக்டராக வேண்டும் என்பதுதான் அவரது கனவு. அதற்காக சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் அறிவியல் பாடத்தை எடுத்து படித்தார்.

   

தன் மகளை திருமணம் செய்துக்கொண்டால், அவரை டாக்டருக்கு படிக்க வைப்பதாக கூற அவரது மகள், பப்ஜி என்கிற அலமேலுவை மணந்துக்கொண்டார் கணேசன். அப்போது அவருக்கு வயது 17. ஆனால் திருமணமான ஒரே ஆண்டில் அவர் இறந்து விட, கணேசனின் டாக்டர் கனவு பொய்த்துப் போனது. அதற்கு பிறகு கல்லூரியில் வேதியியல் பேராசிரியராக சிலகாலம் பணிபுரிந்த அவர், அதன்பிறகு ஜெமினி ஸ்டுடியோவில் மேனேஜராக பணிசெய்தார். அப்போதுதான் அவரது பெயர் ஜெமினி கணேசனாக மாறியது.

அடுத்து சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு வர மிஸ் மாலினி என்ற படத்திலும், அதையடுத்து தாய் உள்ளம் என்ற படத்திலும் வில்லனாக நடித்தார். அடுத்து மனம்போல் மாங்கல்யம் படத்தில் கதாநாயகனாக நடித்தார் ஜெமினிகணேசன். அப்போது மிஸ் மாலினி படத்தில் நடித்த புஷ்பவள்ளியை, ஜெமினி கணேசன் திருமணம் செய்துக்கொண்டார். அது அவரது முதல் மனைவி அலமேலுவுக்கும் தெரியாது. புஷ்பவள்ளி கணவர் ரங்காச்சாரியாருக்கும் தெரியாது. அடுத்து படங்களில் தொடர்ந்து நடித்த ஜெமினி கணேசன், நடிகை சாவித்திரியை காதலித்து ரகசிய திருமணம் செய்துக்கொண்டார்.

அதாவது 3 பெண்களுக்கு ஜெமினி கணேசன் கணவராக இருந்தார். அந்த வகையில் பப்லு என்கிற அலுமேலுவுக்கு 4 பெண் குழந்தைகள், புஷ்பவள்ளிக்கு 2 பெண் குழந்தைகள், சாவித்திரிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என மொத்தம் 8 குழந்தைகளுக்கு ஜெமினி கணேசன் தந்தையானார். இதில் 2வது மனைவி புஷ்பவளளியின் மகள்தான் இந்தி நடிகை ரேகாவாக புகழ் பெற்றார். இந்நிலையில் தனது 77வது வயதில் மலேசியாவைச் சேர்ந்த ஜூலியானா என்ற பெண்ணை 4வது திருமணம் செய்துக்கொண்டார்.

அவருக்கு குழந்தைகள் பிறக்கவில்லை. ஆனால் 8 ஆண்டுகள் ஜூலியானாவுடன் வாழ்ந்த ஜெமினிகணேசன் தனது 85 வது வயதில் இறந்தார். இப்படி தனது வாழ்நாளில் 4 பெண்களுடன் குடும்ப வாழ்க்கை நடத்தி, 7 பெண்கள் உள்பட 8 பேருக்கு தந்தையாக வாழ்ந்தவர்தான் காதல் மன்னன் ஜெமினி கணேசன். அவர் வயதான காலத்திலும் சுந்தர் சி இயக்கத்தில் மேட்டுக்குடி, கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் அவ்வை சண்முகி போன்ற படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Sumathi
Continue Reading

More in CINEMA

To Top