Connect with us

NEWS

லீவு முடிஞ்சு சென்னை வர்றீங்களா? இந்த ரூட்ல போங்க… டிராபிக் இல்லாம ஈஸியா போகலாம்

தமிழகத்தின் தலைநகரமாம் சென்னையில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சொந்து ஊருக்குச் செல்வதும், சொந்த ஊர்களில் இருந்து வேலைக்கு சென்னை வருவதும் பல காலமாக நடந்து வரும் செயல்தான். தற்போது அதிகரித்துவரும் மக்கள் தொகை காரணமாக சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக உள்ளது. விடுமுறைக் காலங்களில் சொந்த ஊர் சென்று வருவது என்பது போருக்குச் சென்று வருவதைப் போல மாறி வருகிறது. மணிக்கணக்கில் டிக்கெட் கவுண்டரில் நிற்பதும், பல மணி நேரம் பஸ்சுக்காக காத்துக் கிடப்பதும் சென்னையின் அடையாளமாகவே மாறிவிட்டது.

#image_title

   

இதனைக் கருத்தில் கொண்டு தென்மாவட்டங்களுக்குச் செல்லும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் கட்டப்பட்டு கடந்த ஆண்டு இறுதியில் செயல்பாட்டுக்கு வந்தது. ஆனால் சரியான திட்டமிடல் இல்லாமையாலும், சென்னை நகருக்குள் செல்ல முறையான பேருந்துகள் வசதி, ரயில் நிலையம் இல்லாததாலும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். கோயம்பேடு பேருந்து நிலையத்தை மாற்றி கிளாம்பாக்கத்தில் கொண்டு வந்ததால் வெளியூர் செல்லும் பயணிகள் நிலை அந்தோ பரிதாபம் தான்.

Bus 1

#image_title

இந்நிலையில் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் போது இந்த ரூட்டில் பயணம் செய்யுங்கள். மிக எளிதாக சென்னை நகரின் அனைத்து இடங்களையும் விரைவில் அடைந்து விடலாம். அரசு பேருந்துகளில் வருவோர். கிளம்பாக்கம் வந்து, அதன்பிறகு புறநகர் ரயிலில் ஏறிக் கொள்ளலாம் என நினைத்தால், அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். ஏனெனில் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் இல்லை. அருகில் உள்ள ஊரப்பாக்கம் ரயில் நிலையம் போக 1.5 கிலோமீட்டர் தூரம் வேண்டும். அவ்வளவு தூரம் பைகளை வைத்துக் கொண்டு பயணிக்க முடியாது.

இதனால் தான் மாத்திரைகள் அலுமினிய கவரால் பேக்கிங் செய்றாங்களா..? வியக்க வைக்கும் டெக்னிக்..

எனவே சென்னைக்குள் நுழையும் போதே பொத்தேரியில் இறங்கி கொள்ளுங்கள். பொத்தேரி ரயில் நிலையம் ஜிஎஸ்டி சாலையை ஒட்டி அமைந்துள்ளது. அங்கு இறங்கி அப்படியே உள்ளே நுழைந்து எளிதாக புறநகர் ரயில்களில் ஏறி திருவெற்றியூர், தண்டையார்பேட்டை, சென்ட்ரல், எழும்பூர், திநகர், தாம்பரம், பல்லாவரம், விமான நிலையம், கிண்டி, கோடாம்பாக்கம், நுங்கம்பாக்கம் என சென்னையின் எந்த பகுதிக்கும் மின்சார ரயிலில் எளிதாக போக முடியும்.
Bus 2

#image_title

சென்னையில் பொத்தேரிக்கு அடுத்து உள்ள கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் ரயில் நிலையங்கள் மெயின்ரோட்டில் இல்லை. உள்ளே சென்று ஏற வேண்டியதிருக்கும். அதுமட்டுமின்றி கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் இல்லை. ஊரப்பாக்கத்தில் அல்லது வண்டலூரில் இறங்கி தான் மாற வேண்டியதிருக்கும். அதனால் அரசு பேருந்து ஓட்டுநர்களுமே, ரயிலில் செல்ல விரும்புவோரின் வசதிக்காக பெத்தேரியில் இறக்கி விடுகிறார்கள். எனவே மின்சார ரயிலில் போக பொத்தேரியில் இறங்கிவிடுங்கள்.. எளிதாக இருக்கும்.

#image_title

Continue Reading

More in NEWS

To Top