Connect with us

CINEMA

இவரு கூடலாம் நான் ஒண்ணா கார்ல போக மாட்டேன்.. தன்னை சினிமாவில் அறிமுகபடுத்திய ராஜ்கிரணை அசிங்கப்படுத்திய வடிவேலு..

கடந்த 1990களில் நடந்த நிகழ்வு இது. ஒருமுறை நடிகர் ராஜ்கிரண், மதுரையில் நடந்த ஒரு தயாரிப்பாளரின் இல்ல திருமணத்துக்கு சென்றவர், ஓட்டலில் தங்கியிருக்கிறார். அப்போது அவரது பேச்சுத் துணைக்காகவும், டீ வாங்கி வரவும் ராஜ்கிரணுக்கு உதவி செய்ய அனுப்பப்பட்டு வந்தவர்தான் வடிவேலு. அவரது பேச்சு, நடை, பாவனை பார்த்து ரசித்த ராஜ்கிரண், அடுத்து அவர் இயக்கிய என் ராசாவின் படத்திலே நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அதுதான் வடிவேலு அறிமுகமான முதல் படம். அடுத்த படம்தான் சின்னக்கவுண்டர். இந்த படத்தின் இயக்குநர் ஆர்வி உதயக்குமார் எடுத்த படம்தான் சிங்கார வேலன். இந்த படத்தில் நடித்த போதுதான் தேவர்மகன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை அளித்தார் நடிகர் கமல்ஹாசன். அந்த படத்துக்கு பிறகுதான் தமிழ் சினிமாவில் வடிவேலுவுக்கு ஒரு நடிகராக அங்கீகாரமே கிடைத்தது.

   

ஆனால் பல படங்களில் நடித்து நடிகராக வளர்ந்த பின், ராஜ்கிரணை மதிக்க தவறினார் வடிவேலு. ஒரு கட்டத்தில் ராஜ்கிரண் நடிக்கும் படங்களில் நான் நடிக்க மாட்டேன் என தயாரிப்பாளர்களிடமும், இயக்குநர்களிடமும் நேரடியாகவே சொன்னார். தொட்டால் பூ மலரும் படத்தில் நடித்த போது ராஜ்கிரணும், வடிவேலுவும் நேரில் சந்திக்காத மாதிரி படம் எடுக்கப்பட்டது. காரணம், ராஜ்கிரணுடன் நான் நடிக்க மாட்டேன் என வடிவேலு கண்டிசன் போட்டதுதான்.

இதுமட்டுமின்றி ஒருமுறை சினிமாவில் சரிவை சந்தித்து, கடனில் ராஜ்கிரண் சிக்கியுள்ளார். அப்போது பத்திரிகையாளர்களிடம் ராஜ்கிரண் பற்றி பேசிய வடிவேலு, ஆமாண்ணே, ராஜ் கிரண் அண்ணன் ரொம்ப கஷ்டத்துல இருக்காரு. அதான் அவரை பார்த்தப்போ கொஞ்சம் கை செலவுக்கு காசு கொடுத்துட்டு வந்தேன். ஏதோ டீ, பீடி சிகரட் செலவுக்காவது ஆவுமில்ல என்று குத்தலாக கூறியிருக்கிறார்.

சமீபத்தில் சென்னையில் நடந்த கலைஞர் 100 விழாவில், கார் பார்க்கிங் இடத்தில் இருந்து, விழா பகுதிக்கு செலிபரட்டிகளை பேட்டரி எலக்ட்ரிக்கல் காரில் அழைத்து சென்றுள்ளனர். அப்போது ராஜ்கிரணுடன் ஒரே காரில் பயணிக்க நேர்ந்ததால், அவருடன் நான் ஒரே காரில் வர மாட்டேன் என்று சொல்லி மறுத்திருக்கிறார் நடிகர் வடிவேலு. ஒரு காலத்தில் அண்ணே, அண்ணே என டீ வாங்கி கொடுத்த வடிவேலு, பழசை எல்லாம் மறந்துட்டாரே என பலரும் திட்டித் தீர்க்கின்றனர். ஆனால் ராஜ்கிரண் எதுவுமே சொல்லாமல் அமைதியாக அங்கிருந்து விழா பகுதிக்கு பேட்டரி காரில் சென்றுள்ளார்.

author avatar
Sumathi
Continue Reading

More in CINEMA

To Top