அடப்பாவிகளா..! விட்டா நசுக்கி சாவடிச்சிடுவீங்க போலையே.. ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கித் தவித்த ராம்சரண்.. வைரலாகும் வீடியோ..!

By Mahalakshmi on மே 13, 2024

Spread the love

தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களின் ஒருவராக வளம் வருபவர் நடிகர் ராம்சரன். மெகா ஸ்டாரான சிரஞ்சீவியின் மகன் என்று அடையாளத்துடன் சினிமாவில் அறிமுகமானாலும் தன்னுடைய நடிப்பால் தற்போது தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கின்றார். பல திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும் ஆர்ஆர்ஆர் திரைப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுக்கொடுத்த திரைப்படம்.

   

இப்படம் சர்வதேச அளவில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஆஸ்கார் அவார்டுகளை இந்த படம் தட்டி தூக்கியது. இதைத்தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ஒரு ஆக்சன் திரைப்படத்தின் நடித்து வருகிறார். இப்படத்தின் பெயர் கேம் சேஞ்சர். இந்த படம் மூலமாக இயக்குனர் சங்கர் தெலுங்கு திரையுலகில் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார்.

   

இப்படத்தில் எஸ்ஜே சூர்யா, அஞ்சலி ஜெயராம், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றது. தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவரது திரைப்படம் தமிழில் ரிலீஸ் ஆனால் அதனை தமிழ் ரசிகர்கள் கொண்டாடி தான் வருகிறார்கள். அந்த அளவுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நடிகர். இவருக்கு சமீபத்தில் வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பாக டாக்டர் பட்டம் ஒன்று வழங்கப்பட்டது.

 

இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. இந்தியாவில் லோக்சபா எலக்சன் நடைபெற்று வருகின்றது. மாநில வாரியாக ஒவ்வொரு நாளும் எலக்சன் நடைபெற்று வருகின்றது. இன்று நான்காம் கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பத்து மாநிலங்களில் மொத்தம் 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது.

ஆந்திராவில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளில், தெலுங்கானாவில் உள்ள 17 மக்களவைத் தொகுதிகள் என இன்று வாக்கு பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தெலுங்கு சினிமாவை சார்ந்த பல பிரபலங்கள் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்குகளை செலுத்தி சென்றனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வந்த நிலையில் நடிகர் ராம்சரண் வாக்கு செலுத்த சென்ற வீடியோ தான் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. அவரை நகரக்கூட விடாமல் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அவர் படாத பாடு பட்டு அங்கிருந்து சென்ற வீடியோ இணையத்தில் படுவயராலாகி வருகின்றது. இதை பார்த்த பலரும் ஒரு மனுஷனை நிம்மதியாக ஓட்டு போட விட மாட்டீங்களா என்று கொந்தளித்து வருகிறார்கள்.