Connect with us
Ajith

CINEMA

ஷூட்டிங் ஸ்பாட்டில் காயம்பட்ட அஜீத்குமார் மருத்துவமனையில் அட்மிட் – கேப்டன் மறைவுக்கு நேரில் வராததற்கு அதுதான் காரணமா?

நடிகர் அஜீத்குமார் தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகர்களில் ஒருவர். ரஜினி, கமல், விஜயை தொடர்ந்து அடுத்து அஜீத் இருக்கிறார். அவர் நடிக்கும் விடாமுயற்சி படப்பிடிப்பு, கடந்த 3 மாதங்களாக அஜர்பைஜானில் நடந்து வருகிறது. அங்கு கடுமையான பனிப்பொழிவு, குளிர், மணல் புயல், சூறாவளி காரணமாக, கடந்த 10 நாட்களுக்கு மேலாக ஷூட்டிங் நடப்பது தடைபட்டுள்ளது. விடாமுயற்சி படக்குழுவினர் தற்போது சென்னையில் உள்ளனர். அஜீத்குமார் சென்னை திரும்பாமல், துபாயில் உள்ள அவரது வீட்டில், குடும்பத்துடன் இருந்து வருகிறார். வரும் 7ம் தேதிக்கு பிறகு மீண்டும் அஜர்பைஜானில் ஷூட்டிங் நடத்த படக்குழு தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

   

கடந்த 28ம் தேதி நடிகர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடல் 29ம் தேதி மாலை, கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த துக்க நிகழ்வில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சத்யராஜ், குஷ்பு, வைரமுத்து, டி ராஜேந்தர் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர். நடிகர் வடிவேலு வராதது கடுமையான விமர்சனத்தை அவர் மீது ஏற்படுத்தியுள்ளது. அதே போல் வெளிநாடுகளில் இருந்ததால் தனுஷ், சூர்யா, கார்த்தி, சிம்பு போன்றவர்களும் கேப்டனின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

ஆனால் இதில் நடிகர் அஜீத்குமார் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். தென்னிந்திய நடிகர் சங்க முன்னாள் தலைவர். தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகாந்த். அவரது மறைவுக்கு நேரில் வராவிட்டாலும், ஒரு இரங்கல் அறிக்கையாவது அஜீத் வெளியிட்டு இருக்கலாம் என்று சினிமாத்துறை சார்ந்தவர்களும், சினிமா ரசிகர்களும் விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய சினிமா விமர்சகர் செய்யாறு பாலு, நடிகர் அஜீத்குமார்,

அஜர்பைஜானில் நடந்த ஷூட்டிங்கில் ஒரு சண்டை காட்சியில் பங்கேற்றார். அவருக்காக டூப் போட்டு நடிக்க 2 டூப் நடிகர்கள் இருந்தும், அந்த ரிஸ்க் ஆன காட்சியில் அவரே நடித்தார். அப்போது அவருக்கு காயம் ஏற்பட்டதால், துபாயில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, 3 நாட்கள் சிகிச்சை பெற்றார். அதனால்தான் அவரால் சென்னைக்கு நேரில் வந்து விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்த முடியவில்லை என்று கூறியிருக்கிறார் செய்யாறு பாலு.

author avatar
Sumathi
Continue Reading

More in CINEMA

To Top