Connect with us

CINEMA

கோவாவில் அசிங்கப்பட்ட பார்த்திபன், வனிதா.. எதனால் தெரியுமா..? இணையத்தில் கசிந்த தகவல்..

சமீபத்தில் கோவாவுக்கு விருது வாங்க போய், அவமானப்பட்டு தமிழ் சினிமா நடிகர், நடிகையர் திரும்பி வந்த சம்பவம் நடந்திருக்கிறது. தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் பிஆர்ஓ வாக பல ஆண்டுகளாக இருந்தவர் சந்தோசம் சுரேஷ். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளை சேர்ந்த நடிகர், நடிகைகளுக்கு சந்தோசம் என்ற பெயரில் விருது வழங்குவதாகவும். அதற்காக கோவாவில் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் சினிமாவை சேர்ந்த நடிகர்கள் பார்த்திபன், ரோபோ சங்கர், நடிகைகள் ரோகிணி, வனிதா வுிஜயகுமார் என 30க்கும் மேற்பட்டவர்கள் இந்த விருது விழாவுக்காக, கோவாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

Parthiban

#image_title

   

கோவா என்றாலே கொண்டாட்டம், கேளிக்கை என சந்தோஷம் பொங்கும் இடம் என்பதால் பார்த்திபன், ரோபோ சங்கர், வனிதா விஜயகுமார், ரோகிணி உள்ளிட்டோர் அதிக ஆர்வத்துடன் கோவாவுக்கு சென்றுள்ளனர். ஆனால், விமான நிலையத்தில் இவர்களை வரவேற்க ஆளில்லை. வாகன ஏற்பாடும் செய்யவில்லை. பிறகு அவர்களே வாடகை கார் பிடித்து குறிப்பிட்ட ஓட்டலுக்கு சென்றால், அங்கு அவர்களுக்கு ரூம்களும் புக்கிங் செய்யப்படவில்லை. ரிசப்னில் நின்று தவித்த அவர்கள், விழாவுக்கு அழைத்த சந்தோஷம் சுரேஷ் என்பவருக்கு போன் செய்துள்ளனர். நான் என்ன செய்யட்டும், நான் நம்பி பணம் கொடுத்தவர்கள், விழா ஏற்பாட்டாளர்கள் என்னை ஏமாற்றி விட்டனர் என்ற கையை விரித்துவிட்டார்.

Parthiban

#image_title

இதையடுத்து நொந்து போன அவர்கள், விருதுக்கு அழைத்தவரை கண்டபடி திட்டி தீர்த்துவிட்டு சொந்த காசை செலவழித்து மீண்டும் விமானம் பிடித்து சென்னை வந்து சேர்ந்து இருக்கின்றனர். இதற்கிடையே இந்த தகவல் பரவிய நிலையில், சந்தோஷம் சுரேஷ் என்பவர், எங்கள் பிஆர்ஓ இல்லை என ஆந்திராவில் சிரஞ்சீவி அலுவலகத்தில் இருந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். விருது தருகிறோம் என்றவுடன் அது யார் தரும் விருது, எதற்காக தரும் விருது, அது மரியாதைக்குரியதா, மதிப்பு மிக்கதா என எதை பற்றியும் யோசிக்காமல் விருது என்றவுடன் மூட்டை முடிச்சு கட்டிக்கொண்டு கோவாவுக்கு சென்றவர்கள், விருதுக்கு பதிலாக பயங்கர அவமானத்தை வாங்கிக்கொண்டு திரும்பி வந்திருக்கின்றனர்.

author avatar
Sumathi
Continue Reading

More in CINEMA

To Top