Connect with us

TRENDING

“2438 கோடி மோசடி…! பிரபல நடிகர் ஆர். கே சுரேஷுக்கு வலைவீச்சு..!! அந்த நாட்டில் பதுக்கப்பட்டுள்ள ஆருத்ரா நிறுவனத்தின் சொத்துகள்…!!”

தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வருபவர் ஆர். கே. சுரேஷ். இவருக்கு தயாரிப்பாளர் மது உடன் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணமானது. இதை அடுத்து ஆர்கே சுரேஷ் மது தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவர் சமீபத்தில் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் மோசடி வழக்கில் சிக்கி தான் தற்பொழுது தலைமறைவாக உள்ளார். சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது ஆருத்ரா கோல்டு நிறுவனம். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக அறிவித்தது. இதை நம்பி லட்சக்கணக்கானோர் முதலீடு செய்ய இப்போது ஏமாந்துள்ளனர்.

   

இந்நிலையில், அந்நிறுவனத்தின் இயக்குநரும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகியுமான ஹரீஷ் மற்றும் மற்றொரு இயக்குநரான மாலதி ஆகியோரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் கடந்த வாரம் கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர். அப்படி செய்த விசாரணையில் தற்போது நடிகரும், பாஜக கலைப் பிரிவு மாநில நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷிற்கு மோசடியில் தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.அவரை விசாரிக்க போலீசார் முயன்றபோது அவர் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆருத்ரா நிதி நிறுவனமானது  இரண்டாயிராத்து நானூற்று முப்பத்தி எட்டு கோடி வரை மோசடி செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த மோசடியில் சம்பந்தம் இருப்பதாக கூறப்பட்டு பிரபல நடிகரும் பாஜக நிறுவனமான ஆர் கே சுரேஷுக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் நடிகர் ஆர் கே சுரேஷ் இந்த வழக்கு தொடர்பாக ஆஜராகவில்லை எனவும் மேற்கொண்டு அவர் துபாயில் பதுக்கி இருப்பதாகவும் பல தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த வழக்கு தொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு ஆருத்ரா நிறுவனத்திற்கு சொந்தமான 500 கோடி மதிப்புள்ள சொத்து துபாயில் பதுக்கப்பட்டுள்ளதாகவும் அதனை முடக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு துபாயில் பதுங்கியுள்ள நடிகர் ஆர் கே சுரேஷ் கைது செய்யவும் மத்திய போலீசார் தொடர்ந்து நடவடிக்கையில் எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆதித்யா நிதி நிறுவனம் நிதி அமைப்பு மட்டுமல்லாமல் பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டு வருவதாகவும், அந்த தொழில்கள் அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டு அவை முடக்கப்பட இருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Continue Reading

More in TRENDING

To Top