
NEWS
இந்தியாவின் 7 பெரும் பணக்கார குடும்பங்கள் எது தெரியுமா?… சொத்து மதிப்பை கேட்டா ஆடி போயிருவீங்க..!!
இந்தியாவைப் பொறுத்த வரையில் 302.4 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. அதில் சில குடும்பங்கள் மட்டுமே சமூகத்தின் உயர் வர்த்தகத்தினராக உள்ள நிலையில் லட்சக்கணக்கான குடும்பங்களில் சில குடும்பங்கள் மட்டும் பெரும் செல்வத்துடன் பணக்கார குடும்பங்களாக வாழ்ந்து வருகின்றன. அதன்படி இந்தியாவில் உள்ள ஏழு பெரும் பணக்கார குடும்பங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அம்பானி குடும்பம்:
ஆடம்பரமான வாழ்க்கை, ஆடம்பரமான விருதுகளுக்காக தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்து வரும் குடும்பம் தான் அம்பானி குடும்பம். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அம்பானியால் நிறுவப்பட்டது. இஷா அம்பானி, ஆனந்த் அம்பானி மற்றும் ஆகாஷ் அம்பானி உள்ளிட்ட மூன்று தலைமுறையினர் இந்த தொழிலை நிர்வகித்து வருகின்றனர். இந்த நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி 87.2 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் ஆசியாவின் பணக்காரராக உள்ளார்.
கோத்ரேஜ் குடும்பம்:
124 ஆண்டுகளுக்கு முந்தைய குடும்ப பாரம்பரிய ம் கொண்டவர்கள் தான் இந்த குடும்பம். முதலில் 1897 ஆம் ஆண்டு அர்தேஷிர் கோத்ரேஜ் பயணத்தை தொடங்கிய நிலையில் இன்று ஆதி கோத்ரேஜ் இந்த நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் உள்ள. கோத்ரேஜ் குடும்பத்தில் நிகர சொத்து மதிப்பு 13.9 பில்லியன் டாலராக உள்ளது.
பிர்லா குடும்பம்:
பாரம்பரியம் மற்றும் தொழில் முனைவு ஆகியவற்றின் உருவமாக ஆதித்ய பிர்லா குழுமம் உள்ளது. சேத் ஷிவ் நாராயணன் பிர்லா பருத்தி வர்த்தகத்தில் முதலில் பயணத்தை தொடங்கிய நிலையில் தற்போது பல வர்த்தகங்களை இவர்களின் குடும்பம் நிர்வகித்து வருகின்றது. இந்த குடும்பத்தின் நிகர மதிப்பு சுமார் 15.5 பில்லியன் டாலர் ஆகும்.
அதானி குடும்பம்:
சாதாரணமாக ஒரு தொழிலை தொடங்கி மிகப்பெரிய தொழிலதிபராக மாறி உள்ளவர்தான் கௌதம் அதானி. இவரின் இரண்டு மகன்கள் அதானி குடும்பத்தின் வளர்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அதானி குடும்பத்தின் நிகர மதிப்பு சுமார் 150 பில்லியன் டாலர்கள் ஆகும்.
பஜாஜ் குடும்பம்:
ஜம்னாலால் பஜாஜ் கடந்த 1926 ஆம் ஆண்டு இந்த குழுமத்தை நிறுவிய நிலையில் முன்னணி நிறுவனமான பஜாஜ் ஆட்டோ மற்றும் இருசக்கர மூன்று சக்கர வாகன உற்பத்தியில் உலகளாவிய நிறுவனமாக இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பஜாஜ் குடும்பத்தின் மொத்த நிகர மதிப்பு 14.6 பில்லியன் டாலராகவும் இந்தியாவின் பணக்காரர்களில் உயர்தர வரிசையிலும் உள்ளனர்.
டாடா குடும்பம்:
இந்தியாவின் தொழில்துறையில் டாடா குடும்பத்தின் பங்களிப்பு அளவிட முடியாதது. இதற்கு முதலில் அடித்தளம் அமைத்தவர் ஜாம்ஷெட்ஜி டாடா. ரத்தன் டாடாவின் நிகர மதிப்பு சுமார் 3800 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மிஸ்திரி குடும்பம்:
இந்தக் குடும்பத்தின் சபூர் பல்லோன்ஜி குழுமம் 1865 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நிலையில் தற்போது மிகப்பெரிய நிறுவனமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. இதன் நிகர மதிப்பு சுமார் 32 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.