Connect with us

CINEMA

பேர கேட்டாலே சும்மா அதுருதுல்லே.. கிரிக்கெட்டில் கெத்து காட்டி அடைமொழியை தன்வசமாக்கிய 6 வீரர்கள்.. யார் யாருன்னு தெரியுமா..?

காட் ஆப் கிரிக்கெட் என்று அழைக்கப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். அவரை போலவே பல்வேறு வித்தைகளை காண்பித்து பெயர் வாங்கிய ஆறு கிரிக்கெட் வீரர்கள் பற்றி பார்ப்போம். முதலாவதாக பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அத்தர் ராவல் பிண்டி எக்ஸ்பிரஸ் என அழைக்கப்படுகிறார். கிட்டத்தட்ட பவுண்டரி கோட்டுக்கு அருகே இருந்து ஓடி வரும் சோயத் வீசும் பந்து பாகிஸ்தான் நாட்டில் செல்லக்கூடிய அதிவேக ரயில் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் மாதிரி இருக்கும் என்பதால் இவருக்கு இந்த பெயர் வந்தது. இதனையடுத்து ராகுல் டிராவிட் பேட்டிங் செய்யும்போது வீசக்கூடிய பந்துகளை டொக்கு போட்டு விடுவார்.

   

குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் பவுலர்கள் மிகவும் சிரமப்படுவதால் ராகுல் டிராவிட்டுக்கு தி வால் என பெயர் வைக்கப்பட்டது. அடுத்ததாக கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட் மேனுக்கு சூட்டப்பட்ட செல்லப் பெயர். இவரது சராசரி டெஸ்ட் போட்டிகளின் ரன்களை அடிக்க இன்று வரை ஆளில்லை. கேப்டன் இம்ரான் கானின் செல்லப் பெயர் லாகூர் லயன். இவர் தலைமையில் தான் பாகிஸ்தான் அணி உலக கோப்பையை வென்றது. ஆல் ரவுண்டரான இம்ரான் கான் லாகூரில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். அடுத்ததாக வீரேந்திர சேவாக் சுல்தான் ஆப் முல்தான் என அழைக்கப்படுகிறார்.

டெஸ்ட் போட்டிகளில் 300 ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் இவர்தான். பாகிஸ்தானுக்கு எதிராக முல்தானில் இவர் 309 ரன்களை அடித்தார் இன்றுவரை ஒரு இந்தியரின் அதிகபட்ச ரன்கள் இதுதான். இதனால் இவரை சுல்தானா ஆப் முல்தான் என அழைக்கின்றனர். கடைசியாக பாகிஸ்தான் அணியின் சுழற் பந்துவீச்சாளர் சையத் அஜ்மல் மேஜிசியன் என அழைக்கப்படுகிறார். இவரது பந்து எங்கிருந்து வரும் எப்படி சுழன்று செல்லும் என்பதை எளிதில் கண்காணிக்க முடியாது. இதனால் அவரை மேஜிசியன் என அழைத்தனர்.

author avatar
Priya Ram
Continue Reading

More in CINEMA

To Top