சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல் இது.

சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் மதுமிதா. எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பெங்களூருவை பூர்வீகமாக கொண்ட இவர் தெலுங்கில் ஏற்கனவே ஒரு சூப்பர் ஹிட் சீரியலில் நடித்திருக்கின்றார். தமிழில் எதிர்நீச்சல் சீரியல் மூலமாக அறிமுகமானார்.

சமுதாயத்தில் பெண்களுக்கு நடக்கும் அநீதியை எடுத்துக் கூறும் மிக போல்டான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மதுமிதா.

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய மதுமிதா youtube சேனல் ஒன்றையும் நடத்தி வைத்திருக்கிறார்.

அதில் தன் குடும்பத்தில் நடக்கும் பல விஷயங்களை பகிர்ந்து கொள்வார். அது மட்டும் இல்லாமல் இவர் பெட்லவ்-வரும் கூட. சமீபத்தில் மாலத்தீவுக்கு சம்மர் வெக்கேஷனுக்காக சென்றிருந்தார்.

அப்போது மாடல் உடையில் அவர் பல புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
