ஐயோ இப்படியா உயிர் போகணும்?… குளிருக்கு இதமாக வீட்டில் தீ மூட்டி குடும்பத்தினர்… இரவோடு இரவாக மூச்சு திணறி 4 பேர் உயிரிழந்த சோகம்…!

Spread the love

உத்தரப்பிரதேசம், டெல்லி மற்றும் பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் குளிரின் தாக்கம் என்பது அதிக அளவில் உள்ளது. இந்த குளிரிலிருந்து தப்பிப்பதற்காக மக்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். இதனிடையே பீகார் மாநிலம் சரண் மாவட்டம் ஷப்ரா பகுதியை சேர்ந்த எட்டு பேரை கொண்ட குடும்பத்தினர் அதிக குளிரிலிருந்து தப்பிப்பதற்காக நேற்று முன்தினம் இரவு வீட்டுக்குள் தீ மூட்டி உள்ளன. வீட்டில் உள்ள ஒரு அறையில் தீ மூட்டி அறையின் கதவு மற்றும் ஜன்னல்களை மூடிவிட்டு உறங்கியுள்ளனர்.

அப்போது நெருப்பில் இருந்து வெளியேறிய புகையால் தூங்கிக் கொண்டிருந்த அனைவருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டதால் மயங்கி விழுந்துள்ளனர். காலை நீண்ட நேரம் ஆகியும் வீட்டின் கதவுகள் திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அங்கு குடும்பத்தினர் எட்டு பேரும் மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அனைவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் அதில் மூன்று குழந்தைகள் உட்பட நான்கு பேர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். மீதமுள்ள நான்கு பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த துயர சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

3 மணத்தியாலங்கள் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

3 மணத்தியாலங்கள் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

4 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

4 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

4 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

4 மணத்தியாலங்கள் ago