32 ஆண்டுகளாக தனி ஆளாய் ஒரு தீவை பாதுகாத்து வரும் மனிதர்! திடீரென்று காத்திருந்த பேரதிர்ச்சி

32 ஆண்டுகளாக ஒரு மனிதர் எந்த ஒரு பிரதிபலனை எதிர்பார்க்காமல் ஒரு தீவை பாதுகாத்து வந்துள்ளார்.

ஆனால் தற்போது அவருக்கே தீவில் இருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

அவர் யார்? அந்த தீவு எது? என்பது பற்றி இப்போது காண்போம்.இத்தாலியின் ராபின்சன் க்ரூஸோ என்று அழைக்கப்படும் மவுரோ மொராண்டி (81) நபர் தான் இந்த பெருமைக்கு சொந்தக்காரர்.

1989-ம் ஆண்டில் தனது நண்பர்களுடன் தெற்கு பசிபிக் பெருங்கடலில் பயணம் செய்து கொண்டிருந்தார் மவுரோ மொராண்டி.

அப்போது அவர்கள் இத்தாலியின் இளஞ்சிவப்பு-மணல் கொண்ட கடற்கரைக்கு பெயர் பெற்ற புடெல்லி என்ற தீவில் தஞ்சமடைந்தனர்.

இவர் பல ஆண்டுகளாக தீவை எந்தவித பிரச்சனையும் இன்றி பாதுகாத்து, கடற்கரைகளை அழகாக வைத்திருந்தார்.

தீவின் சுற்றுச்சூழல் குறித்து சுற்றுலா பயணிகளிடம் விளக்கினார்.

இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் புடெல்லியை நிர்வகித்து வரும் லா மடாலேனா தேசிய பூங்கா அதிகாரிகள் மவுரோ மொராண்டியை, தீவில் இருந்து வெளியேறும்படி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தனர்.

அவரை புடெல்லி தீவிலேயே தங்க அனுமதிக்குமாறு இத்தாலிய அரசிடம் கேட்டு 70,000 க்கும் மேற்பட்டவர்கள் கையெழுத்திட்ட மனுக்கள் அனுப்பப்பட்டன.

32 ஆண்டுகளுக்கு பிறகு…

ஆனால் தொடர் அழுத்தத்தால் 32 ஆண்டுகளுக்கு பிறகு புடெல்லி தீவை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளார் மவுரோ மொராண்டி.

32 ஆண்டுகளாக புடெல்லி தீவை நான் பாதுகாத்துள்ளதால் எதிர்காலத்தில் புடெல்லி இதுபோல் பாதுகாக்கப்படும் என்று தான் நம்புவதாக” மவுரோ மொராண்டி தெரிவித்தார்.

ஆனால் இவரை போல் இந்த தீவை இனிமேல் யாரும் பாதுகாக்க முடியாது என்று இத்தாலி மக்கள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *