சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடைசியாக லால் சலாம் படத்தை இயக்கினார். ஆனால் எதிர்பார்த்த அளவு படம் வெற்றி பெறவில்லை.

ஐஸ்வர்யா தனது கணவர் தனுஷை வைத்து 3 திரைப்படத்தை இயக்கினார். படம் ரிலீஸ் ஆன நேரம் சரியாக பேசப்படவில்லை என்றாலும் தற்போது வரை 3 படத்திற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் அடுத்த படத்திற்கு சித்தார்த் ஹீரோவாக நடிக்க கமிட் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் அதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கூலி படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புதிதாக ஒரு வீட்டை வாங்கி இருக்கிறார்.

அந்த வீட்டில் வேலைகள் முழுவதுமாக முடிவடைந்தது. தனது தந்தை ரஜினிகாந்த், தாய் லதா, மகன்கள் யாத்ரா லிங்கா ஆகியோருடன் ஐஸ்வர்யா அந்த வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டை ரஜினிகாந்த் வியந்து பார்த்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
#thalaivar and family #rajinikanth
Such a beautiful candid video ❤️#rajinikanth #aishwaryarajinikanth #indianactor #actorrajinikanth@rajinikanth pic.twitter.com/zmcAcFx5fw— White Horse Media (@WhiteHorseOffl) April 30, 2024
