“நெட் சென்டருக்குள் நடந்த பயங்கரம்!.. பெண்களை ஆபாச படமெடுத்து ரசித்த 26 வயது இளைஞர்.. செல்போனைத் திறந்த போலீசாருக்குக் காத்திருந்த அதிர்ச்சி.. நெல்லையில் பரபரப்பு..!!”

Spread the love

நெல்லை மாவட்டம் பேட்டை ஆர்.பி. சன்னதி தெருவைச் சேர்ந்த முகமது அசரப் அலி (26) என்பவர், அப்பகுதியில் உள்ள அம்மா உணவகம் எதிரே ஆன்லைன் சேவை மையம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். நேற்று இவரது கடைக்கு, பேட்டை நாராயணசாமி கோவில் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர் ஆதார் அட்டை நகல் (ஜெராக்ஸ்) எடுப்பதற்காக வந்துள்ளார். அப்போது அசரப் அலி, அந்த இளம்பெண்ணுக்குத் தெரியாமல் அவரது செல்போனில் புகைப்படம் மற்றும் ஆபாச வீடியோ எடுத்துள்ளார். இதைத் தற்செயலாகக் கண்டறிந்து அதிர்ச்சியடைந்த இளம்பெண், உடனடியாகத் தனது கணவருக்குத் தகவல் தெரிவித்து அங்கு வரவழைத்துள்ளார்.

அங்கு விரைந்து வந்த இளம்பெண்ணின் கணவர், அசரப் அலியிடம் இதுகுறித்துத் தட்டிக் கேட்டுள்ளார். முதலில் மறுத்த அசரப் அலி, அவர் காவல் துறைக்குப் புகார் அளிக்க முயன்றதால் பயந்துபோய் அங்கிருந்து தப்பியோடினார். அவசரத்தில் அவர் விட்டுச் சென்ற செல்போனைத் தம்பதியினர் கைப்பற்றினர். பின்னர், அந்த போனுடன் பேட்டை காவல் நிலையத்திற்குச் சென்று நடந்த கொடூரம் குறித்துத் தம்பதியினர் முறைப்படி புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், உடனடியாக விசாரணையைத் தொடங்கினர்.

போலீசார் அசரப் அலியின் செல்போனைத் திறந்து சோதனை செய்தபோது, அதில் அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் வெளியாகின. அந்த போனில் சுமார் 20-க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாசமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பதிவாகி இருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். ஆன்லைன் சேவை மையத்தின் எதிரே பேருந்து நிறுத்தம் உள்ளதால், அங்கு பேருந்துக்காகக் காத்திருக்கும் பெண்களைத் தொலைவில் இருந்தவாறே அவர்களுக்குத் தெரியாமல் தவறான எண்ணத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து அவர் சேமித்து வந்ததும் போலீஸ் விசாரணையில் அம்பலமானது.

இதையடுத்து, பிறர் அறியாமல் அந்தரங்கத்தை நோட்டமிடுதல் மற்றும் படம் பிடித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் (புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 77) பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மாநகர போலீஸ் கமிஷனரின் உத்தரவின் பேரில், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் வேல் சவுத்ரி தலைமையிலான குழுவினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, தலைமறைவாக இருந்த முகமது அசரப் அலியை இன்று காலை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவர் வேறு ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளாரா என்பதை அறிய, அவரது கடையில் இருந்த கணினி மற்றும் இதர மின்னணு சாதனங்களை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

Muthu Mani

Recent Posts

“மின் கட்டணத்தைப் பார்த்து சொரணை வந்திருக்கு…” மதுக் கிண்ணத்தில் விழுந்த வண்டு போல மயக்கத்தில் மக்கள்…” தவெக ஆட்சியை கிழித்தெறிந்த ஆர்.எஸ். பாரதி…!!

சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் பெரம்பூரில் நடைபெற்ற மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் நாடாளுமன்ற…

7 minutes ago

“என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா…” “பூங்காற்று திரும்புமா பாட்டு கேட்ட காரோட்டிக்கு ஷாக்… கண் இமைக்கும் நேரத்தில் தப்பிய ஸ்கூட்டி பெண்… பகீர் சம்பவம்…!!!

திருப்பூர் பகுதியில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்றில் 'முதல் மரியாதை' படத்தின் "பூங்காற்று திரும்புமா..." பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அப்போது,…

15 minutes ago

” அறங்காவலர்களை ஒதுக்கிவிட்டு அராஜகம்…” திருப்பணிகளை செய்தது திமுக அரசுதான்… மதுரை மீனாட்சியம்மன் கும்பாபிஷேகக் குளறுபடியில் கொந்தளித்த பிடிஆர்…!!!

வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான குளறுபடிகள், விஐபி கலாச்சாரம் மற்றும் பக்தர்கள்…

38 minutes ago

“10 நிமிஷத்துல உள்ள விடலைனா கேட்டை உடைப்போம்…” மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் பெண் பக்தர்கள் கொந்தளிப்பு…!!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மிக விமரிசையாகக் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், தவெக அரசின் மோசமான…

56 minutes ago

“உள்ளே வராதீங்க… என்ன செஞ்சீங்க..?” மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு கடும் எதிர்ப்பு…! பிரச்சாரத்தில் திடீர் பரபரப்பு…!!

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேல், வீராணக்குன்னம் கிராமப் பகுதியில் தீவிர வாக்கு…

1 மணத்தியாலம் ago

“என் மகளை கிண்டல் பண்றியா…?” கணவரை காணாமல் தவித்த மனைவி…. பல கி.மீ தூரத்தில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்…. சினிமாவை மிஞ்சிய நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள சிவல்சருகு கிராமத்தைச் சேர்ந்த சங்கிலி முருகன் (38) கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி…

1 மணத்தியாலம் ago