“ஐயோ காப்பாத்துங்க…” சேற்றுக்குள் புதைந்த மூன்று மாடி கட்டிடம்… ஒரே இடத்தில் பிணமாக மீட்கப்பட்ட 24 பேரின் பேரதிர்ச்சி சம்பவம்…!

Spread the love

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் திடீரென ஏற்பட்ட கோரப் பேரழிவு வெள்ளத்தில் சிக்கி, 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நேபாளத்தின் ரசுவா எல்லைக்குட்பட்ட நுவாகோட் மாவட்டத்தின் பெட்ராவதி கிராமத்தில், பெருக்கெடுத்து வந்த சேறும் சகதியும் பல கட்டிடங்களை அடியோடு மூழ்கடித்தன. இப்பகுதியில் காவல்துறை நடத்திய ட்ரோன் சோதனையின் மூலமாக, சேற்று வெள்ளத்தில் சிக்கியிருந்த ஒரு மூன்று மாடி கட்டிடத்திற்குள் மனித உடல்கள் இருப்பது முதன்முதலில் கண்டறியப்பட்டது.

மீட்புக் குழுவினர் இடிபாடுகளில் இருந்து கிடைத்த தகர ஷீட்டுகள், மரக்கட்டைகள் மற்றும் கயிறுகளைக் கொண்டு ஆபத்தான வழியை ஏற்படுத்தி அந்த கட்டிடத்திற்குள் நுழைந்தனர். அங்கு உறைந்துபோன சேற்றுக்குள் புதைந்திருந்த 12 பெண்கள், 11 ஆண்கள் மற்றும் ஒரு சிறுமி உட்பட மொத்தம் 24 உடல்களை அவர்கள் கடும் சிரமத்திற்கிடையில் மீட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட இந்தக் கட்டிடம் பகுராம் அவஸ்தி என்பவருக்குச் சொந்தமானது என்பதும், அதன் தரைதளத்தில் ‘உத்தரகாயா மினி மார்ட்’ என்ற அங்காடி இயங்கி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வெள்ளத்தில் சிக்கிய மக்கள் பாதுகாப்பிற்காக இந்தக் கட்டிடத்திற்குள் தஞ்சமடைந்தனரா அல்லது அங்காடிக்கு வந்த வாடிக்கையாளர்களா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. கட்டிடத்தின் சில பகுதிகளை இன்னும் அடைய முடியவில்லை என்றும், அங்கும் சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் நுவாகோட் காவல் கண்காணிப்பாளர் பிபின் ரெக்மி தெரிவித்துள்ளார். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் தீவிரப் பணிகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன.

Swetha

Recent Posts

குடும்பத்திற்கு அடித்த பேரதிர்ஷ்டம்… ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள்… இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்… குவியும் வாழ்த்துக்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டத்தில் உள்ள குடும்பம் ஒன்றில் ஒரே நேரத்தில் 4 நல்வரவுகள் வருகை தந்துள்ள சம்பவம்…

3 minutes ago

அட கொடுமையே… நிலத் தகராறில் நடுரோட்டில்… தந்தை மீது கொடூரத் தாக்குதல் நடத்திய மகன்கள்… பதைபதைக்க வைக்கும் வைரல் வீடியோ…!

கலியுகத்தின் கொடூரச் செயலாக, மகாராஷ்டிராவின் இந்தாபூர் பகுதியில் தந்தை என்று கூட பாராமல் தன் சொந்தத் தந்தையை இரண்டு மகன்கள்…

4 minutes ago

ஐயோ… என்னடா பிராங்கா இது?… கைகூப்பி கதறிய காதலி… மயங்கிச் சரிந்த கொடூரம்… கண்விழிக்காமல் போராடும் பரிதாபம்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

அந்தப் பையன் தன் காதலி மீது செய்த கொடூரமான குறும்பினால் அவள் கைகளைக் கூப்பி அழுது கெஞ்சியபோதும் அவன் மனம்…

23 minutes ago

அதிகாலையில் பயங்கரம்…! வாலிபரை வெட்டி கொன்ற கும்பல்… முன்விரோதம் தான் காரணமா…? இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மயிலார்தேவ்பள்ளி காவல் எல்லைக்குட்பட்ட சுபான் காலனி கட்டம் 2 பகுதியில், 25 வயதான சோஹைல் என்ற…

35 minutes ago

தங்கை,சகோதரனுடன் வசித்த பெண்… இரவில் மனைவியுடன் இருந்த கணவர்… விடிந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி…. பகீர் பின்னணி…!!

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சுதா (எ) சிவானி என்ற பெண்ணும், குவாலியரைச் சேர்ந்த யாஷ் தாக்குர் (28) என்ற வாலிபரும்…

43 minutes ago