தங்கை,சகோதரனுடன் வசித்த பெண்… இரவில் மனைவியுடன் இருந்த கணவர்… விடிந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி…. பகீர் பின்னணி…!!

Spread the love

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சுதா (எ) சிவானி என்ற பெண்ணும், குவாலியரைச் சேர்ந்த யாஷ் தாக்குர் (28) என்ற வாலிபரும் சமூக வலைத்தளம் மூலம் காதலித்து ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு கணவர் அடிக்கடி தகராறு செய்து தாக்கியதால், சிவானி ஜான்சியின் சிப்ரி பஜார் பகுதியில் அறை எடுத்துத் தனது தங்கை முஸ் கான் மற்றும் சகோதரர் அனிகேட்டுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், ரக்ஷா பந்தன் முடிந்து ஜான்சிக்கு வந்த கணவர் யாஷ் தாக்குருக்கும், சிவானிக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை இரவு கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அருகில் உள்ள அறையில் தங்கை முஸ்கான் தூங்கச் சென்ற நிலையில், சிவானியும் யாஷும் மற்றொரு அறையில் தூங்கியுள்ளனர். நள்ளிரவு 2 மணி அளவில் யாஷ், சிவானியைக் கொடூரமாகக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

கொலை செய்த பிறகு, தங்கை முஸ்கான் தூங்கிக் கொண்டிருந்த அறையையும், சிவானியின் அறையையும் வெளியே பூட்டிவிட்டு யாஷ் தப்பி ஓடியுள்ளார். திங்கள்கிழமை காலை சகோதரர் அனிகேட் வந்து கதவைத் திறந்தபோதே சிவானி பிணமாகக் கிடந்தது தெரியவந்தது. பிரேதப் பரிசோதனையில் சிவானி கயிறு அல்லது துணியால் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள கணவர் யாஷ் தாக்குரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

சீச்சீ…! “சாக்கடை அருகில் சேமிக்கப்பட்ட சமோசாக்கள்…” சமையலுக்கு வடிகட்டாத தண்ணீர் பயன்பாடு… உணவு பாதுகாப்பு துறை அதிரடி…!!

மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…

10 minutes ago

அட கடவுளே… பயிற்சியின் போது ஆற்றில் கவிழ்ந்த படகு… கண் இமைக்கும் நேரத்தில் மாயமான ராணுவ வீரர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!

ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…

17 minutes ago

என்னை வெட்டுறதுக்கு அவ்ளோ தைரியமாடா?… ரவுடி ஷீட்டரின் கத்திக் குத்து வெறியாட்டம்… விசாகப்பட்டினத்தில் உச்சக்கட்ட பரபரப்பு…!!

விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு திபன் மையம் அருகே ஏற்பட்ட திடீர் மோதலில், ரவுடி ஷீட்டர் வட்டாடி கிருஷ்ணா என்பவர் சந்தோஷ்…

47 minutes ago

அய்யய்யோ… கடவுளுக்கே இந்த நிலையா?… கோவிலில் அதிகாலையில் புகுந்து… அஷ்டதாது சிலைகள், தங்கம் மற்றும் உண்டியல் பணத்தை… அள்ளிச் சென்ற மர்ம நபர்… நடுங்க வைக்கும் சம்பவம்…!

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ராஜ்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குணியால் கிராமத்தில் அமைந்துள்ள மாதா பரணா தேவி கோவிலில்…

56 minutes ago

குடும்பத்திற்கு அடித்த பேரதிர்ஷ்டம்… ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள்… இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்… குவியும் வாழ்த்துக்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டத்தில் உள்ள குடும்பம் ஒன்றில் ஒரே நேரத்தில் 4 நல்வரவுகள் வருகை தந்துள்ள சம்பவம்…

1 மணத்தியாலம் ago