ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர். செப்டம்பர் 1 அன்று நடைபெற்ற இந்த வழக்கமான பயிற்சியின்போது, நான்கு வீரர்கள் கொண்ட குழு கடுமையான நீரோட்டத்தை எதிர்கொண்டதாகத் தெரிகிறது.
தடுப்பணையின் கடுமையான நீரோட்டத்தின் மத்தியில் திடீரென படகு கவிழ்ந்ததில், நான்கு வீரர்களும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் இருவர் தங்களது திறமையால் நீந்தி கரையேறி உயிர் தப்பினர். இருப்பினும், மற்ற இரு வீரர்களின் நிலை என்னவென்று உடனடியாகத் தெரியவரவில்லை; அவர்கள் ஆபத்தான நீரோட்டத்தில் இழுத்துச் செல்லப்பட்டனர்.
https://twitter.com/contentkikamii/status/2095041324919750907/video/1
தற்போது சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள மாநில பேரிடர் மீட்பப் படை மற்றும் ராணுவ மீட்புக் குழுவினர் இணைந்து, காணாமல் போன வீரர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். யமுனா நதியின் நீரோட்டம் அதிகளவில் இருப்பதால் தேடுதல் பணியில் சவால்கள் ஏற்பட்டுள்ள போதிலும், மீட்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…
சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
சென்னை கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சரண்ராஜ் (36), கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு முதல்…