ஐயோ… என்னை கல்யாணம் பண்ணிக்க… திருமணத்திற்கு No சொன்ன காதலி… ஸ்கெட்ச் போட்டு காரில் கடத்தி.. கொலை செய்த காதலன்… மத்தியப் பிரதேசத்தை உலுக்கிய பகீர் சம்பவம்…!

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12 மணி நேரத்திற்குள் வெற்றிகரமாகத் தீர்த்து வைத்துள்ளனர். அவாத் புராவைச் சேர்ந்த அந்தச் சிறுமி நயா பஜாரில் உள்ள ஒரு புடவைக் கடையில் வேலை செய்து வந்துள்ளார். இஷான் கான் என்பவருடன் இரண்டு ஆண்டுகளாகக் காதலில் இருந்த அவர், இஷானின் வேறு ஒரு தொடர்பு காரணமாக அண்மையில் அவரிடம் இருந்து விலகத் தொடங்கியுள்ளார். இதற்கிடையே சிறுமிக்கு வேறு இடத்தில் திருமணம் ஏற்பாடானதால் ஆத்திரமடைந்த இஷான், தனது உறவினர் அர்பாஸ் கானுடன் சேர்ந்து அவரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு வேலை முடிந்து வீடு திரும்பிய சிறுமியை கே.ஆர்.ஜி கல்லூரி அருகே பலேனோ காரில் கடத்திச் சென்றனர். கேன்சர் ஹில்ஸ் மலைப்பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்தச் பெண்ணிடம், தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு இஷான் வற்புறுத்தியுள்ளார். அதற்குச் சிறுமி திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், இஷானின் தூண்டுதலின் பேரில் அர்பாஸ் சிறுமியின் கைகளைப் பிடித்துக் கொள்ள, இஷான் தனது காதலியின் துப்பட்டாவைக் கொண்டே அவரது கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். பின்னர் சடலத்தைப் புதர்களில் வீசிவிட்டு இருவரும் தப்பிச் சென்றுள்ளனர்.

காணாமல் போன சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், இஷானைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது. திருமணம் செய்ய மறுத்ததே இந்த கொடூரக் கொலைக்கு முக்கியக் காரணம் என்று சிஎஸ்பி தரம்வீர் சிங் தெரிவித்துள்ள நிலையில், கைதான இருவரிடமும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Swetha

Recent Posts

பகீர்… மனைவியை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு… கீழே விழுந்து இறந்ததாக நாடகமாடிய கணவன்… குடிபோதையில் அரங்கேறிய கொடூரம்…!!

சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…

1 மணத்தியாலம் ago

அய்யய்யோ… ராஜதந்திரம் அனைத்தும் வீணாகிவிட்டதே… சிங்கப்பூரில் இருந்து உள்ளாடைக்குள்… 43 சவரன் தங்கத்தைக் கடத்திய பயணி… வளைத்துப் பிடித்த சுங்கத்துறை… விமானத்தில் பரபரப்பு…!

சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… போதை பழக்கம் தெரிந்து திருமணம் நின்றதால் ஆத்திரம்… பெண்கள் மீது ஆசிட் வீசிய கொடூரன்… உ.பி.யில் அரங்கேறிய பயங்கரம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…

2 மணத்தியாலங்கள் ago

சீச்சீ…! “சாக்கடை அருகில் சேமிக்கப்பட்ட சமோசாக்கள்…” சமையலுக்கு வடிகட்டாத தண்ணீர் பயன்பாடு… உணவு பாதுகாப்பு துறை அதிரடி…!!

மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…

2 மணத்தியாலங்கள் ago

அட கடவுளே… பயிற்சியின் போது ஆற்றில் கவிழ்ந்த படகு… கண் இமைக்கும் நேரத்தில் மாயமான ராணுவ வீரர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!

ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…

2 மணத்தியாலங்கள் ago

“3 பிள்ளைகளை தவிக்க விட்டு காதலனுடன் சென்ற பெண்…” கண்ணை மறைத்த காதல்… கொலை செய்து நாடகமாடிய வாலிபர்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…!!

சென்னை கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சரண்ராஜ் (36), கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு முதல்…

3 மணத்தியாலங்கள் ago