புதுக்கோட்டை மாவட்டம் பெருமாநாடு கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் – மகேஸ்வரி தம்பதியரின் 17 வயது மகன் அன்புச்செல்வன், முன்விரோதம் காரணமாக மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2024-ஆம் ஆண்டு, அன்புச்செல்வனின் தாய் மாமா முருகானந்தத்திற்கும், அவர்களது உறவினரான சத்யராஜ் என்பவருக்கும் இடையே கூலிப் பணத்தைப் பிரிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் மாமாவிற்கு ஆதரவாகச் செயல்பட்ட அன்புச்செல்வனும் முருகானந்தமும் சேர்ந்து சத்யராஜைத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சத்யராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து, அவர்கள் இருவர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நிலுவையில் இருந்தது.
கொலை வழக்கில் சிக்கியதால் பாதுகாப்பு கருதி பெற்றோரால் ஓசூருக்கு அனுப்பி வைக்கப்பட்ட அன்புச்செல்வன், அங்கு ஐடிஐ முடித்துவிட்டு வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், இவ்வழக்கின் விசாரணைக்காக ஓசூரில் இருந்து பத்து நாள் விடுமுறையில் நேற்று முன்தினம் அவர் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அன்று இரவு அவரது நண்பர்கள் சிலர் அன்புச்செல்வனின் பைக்கை வாங்கிச் சென்றுள்ளனர். பின்னர் பைக்கைத் திரும்பக் கேட்டபோது, பெருமாநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே வந்து எடுத்துக் கொள்ளுமாறு நண்பர்கள் கூறியுள்ளனர்.
அதன்படி பைக்கை எடுப்பதற்காக அன்புச்செல்வன் டாஸ்மாக் பகுதிக்குச் சென்றபோது, அங்கு பதுங்கியிருந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரைச் சுற்றி வளைத்துச் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் தலை மற்றும் கைகளில் பலத்த காயமடைந்த அந்தச் சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். தகவலறிந்து வந்த அன்னவாசல் போலீசார், உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலையில் பைக் வாங்கிச் சென்ற நண்பர்களுக்குத் தொடர்பு உள்ளதா, அல்லது சத்யராஜ் கொலை வழக்கின் பழிவாங்கலாக இந்த அசம்பாவிதம் நடந்ததா என்ற கோணங்களில் போலீசார் சிலரைப் பிடித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் ‘அம்மா மருந்தகங்களில்’ முதலமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என்று அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர்…
கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த…
கர்நாடகாவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான லோகேஷ் அக்ஷய் (39), மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோதே திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக…
விசிக கட்சியின் முக்கிய நிர்வாகியும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ் திமுகவில் இணையவுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு…
தமிழக வருவாய்த் துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் காய்ச்சல், வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக கோவையில் உள்ள ஒரு…
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாத ஒன்று என்று…