பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தின் சாகேப்கஞ்ச் காவல் எல்லைக்குட்பட்ட கோடா கிராமத்தில், காதல் திருமணம் தொடர்பான தகராறில் மீனா தேவி (35) என்ற பெண் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தப் பெண்ணின் கொழுந்தன் சுதீர் பாஸ்வான், அதே கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் பாஸ்வான் என்பவரின் மகளைக் காதலித்து, குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி வீட்டை விட்டு ஓடிச் சென்று திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை ரஞ்சித் பாஸ்வான், பழிவாங்கும் நோக்கில் இந்த கொடூரக் கொலையைச் செய்துள்ளார்.
சம்பவத்தன்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில், ரஞ்சித் பாஸ்வான் துப்பாக்கியுடன் சுதிரின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அங்கு சுதிரின் தாய் வழக்கமாகப் படுக்கும் கட்டிலில், அன்று இருட்டில் அடையாளம் தெரியாமல் மீனா தேவி படுத்திருந்தார். சுதிரின் தாய் என்று தவறாக நினைத்து ரஞ்சித் பாஸ்வான் அந்தப் பெண் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் 4 குண்டுகள் பாய்ந்து மீனா தேவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அன்று இரவு படுக்கையை மாற்றியதால் சுதிரின் தாய் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வருவதற்குள் கொலையாளி ரஞ்சித் பாஸ்வான் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இது குறித்துத் தகவல் அறிந்த போலீசாரும் தடயவியல் நிபுணர்களும் (FSL) சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். இந்தச் சம்பவம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான ரஞ்சித் பாஸ்வானை போலீசார் உடனடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் ‘அம்மா மருந்தகங்களில்’ முதலமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என்று அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர்…
கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த…
கர்நாடகாவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான லோகேஷ் அக்ஷய் (39), மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோதே திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக…
விசிக கட்சியின் முக்கிய நிர்வாகியும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ் திமுகவில் இணையவுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு…
தமிழக வருவாய்த் துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் காய்ச்சல், வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக கோவையில் உள்ள ஒரு…
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாத ஒன்று என்று…