ஆதவ் அர்ஜுனா உறவினர் போதைப்பொருள் கடத்தலின் Master Mind தானே..? இதை சொன்னதால் தான் யுடியூபர் மாரிதாஸ் கைதா..? அதிமுக கேள்வி..!!

Spread the love

பிரபல வலதுசாரி யூடியூபர் மாரிதாஸ் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மற்றும் தவெக கூட்டணி அரசுக்கு எதிராக அவதூறான கருத்துகளைப் பதிவிட்டதாகச் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரால் மதுரையில் வைத்து அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மாரிதாஸ் தனது எக்ஸ் (X) மற்றும் யூடியூப் தளங்களில், தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் மாநில அமைச்சர்களைக் கடுமையாக விமர்சித்துத் தொடர்ச்சியாகக் காணொளிகளையும் பதிவுகளையும் வெளியிட்டு வந்தார். இதன் அடிப்படையில், சென்னை சைபர் கிரைம் காவல்துறை அவர் மீது தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து, இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

யூடியூபர் மாரிதாஸ் அவர்களைக் கைது செய்ய அவரது வீட்டின் முன்பு காவல்துறையினர் குவிந்திருப்பதாக வெளியாகும் செய்திகளைத் தொடர்ந்து, அதிமுக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தற்போதைய அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜனநாயகத்தில் கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் பாசிச போக்குடன் இந்த அரசு செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ள அதிமுக, “ஆட்சி மாறி விட்டதோ? ஆனால், காட்சிகள் மாறாதது ஏன்?” என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

அமலாக்கத்துறை (ED) நடத்திய சோதனையில் ரூ.258 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கிய விவகாரத்தில்,ஆதவ் அர்ஜுனா உறவினர் ‘ஜான் பிரிட்டோ’ என்பவர் மூளையாகச் செயல்பட்டதாக சொன்னது உண்மை தானே. இந்த விவகாரத்தில் உண்மை இல்லை என அரசு கருதினால், அவதூறு வழக்கு தொடரலாம் அல்லது செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்திருக்கலாம்; அதைவிடுத்து, விசாரணைக்கு நோட்டீஸ் கூட தராமல் நேரடியாகக் காவலர்களை அனுப்பி கைது செய்யத் துடிப்பது ஏன் என அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.

மடியில் கனமிருப்பதால்தான் வழியில் பயம் இருக்கிறதோ என்று சாடியுள்ள அதிமுக, ஜனநாயகக் குரலை ஒடுக்க முயலும் இந்த அரசின் அராஜகப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளது. மேலும், யூடியூபர் மாரிதாஸ் அவர்கள் மீது எடுக்கப்பட்டு வரும் இத்தகைய அராஜக நடவடிக்கைகளை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் அந்தப் பதிவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Soundarya

Recent Posts

பரபரக்கும் தமிழக அரசியல்…. ‘தி மிசா மார்க்’ ரிலீஸ் தேதி பிக்ஸ்… உதயநிதி போட்ட ஸ்கெட்ச்…. விஜய்க்கு திமுகவின் அதிரடி பதிலடி….!

தமிழக முதல்வர் விஜய்யின் மிசா குறித்த பேச்சுக்கு அரசியல் ரீதியாகப் பதிலடி கொடுக்கும் வகையில், 'தி மிசா மார்க்' என்ற…

3 minutes ago

ஐயோ… 20 வருஷம் சிறை… கடைசியில தேநீர் கடையிலயா?… நிதாரி வழக்கு சுரேந்தர் கோலியின் விபரீத முடிவு… அதிர்ச்சி பின்னணி…!

நாட்டின் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிதாரி தொடர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுரேந்தர் கோலி, ஹரித்வாரின் பூபத்வாலா பகுதியில்…

40 minutes ago

அடேங்கப்பா…! இத்தனை கோடி விலையா…? சொகுசு காரில் வந்து இறங்கி நெட்டிசன்களை மிரள வைத்த பாடகி… இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ…!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏவும் பிரபல இளம் பாடகியுமான மைதிலி தாகூர், மும்பையின் புகழ்பெற்ற லால்பாக் சா ராஜா விநாயகர்…

40 minutes ago

“ஸ்கூட்டரில் மலைப்பாம்புடன் மாஸ் ரைடு…” அதிர்ந்து போன ஐ.டி ஊழியர்கள்…. ஆனாலும் ரொம்ப தைரியம் தான்… நெட்டிசன்களை உலுக்கிய நெஞ்சை நடுங்கவைக்கும் வீடியோ…!!

ஹைதராபாத்தில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தின் நுழைவு வாயில் அருகே, பிரம்மாண்டமான மலைப்பாம்பு ஒன்று சுற்றித் திரிவதைக் கண்டு அங்கிருந்த…

48 minutes ago

“புது குழந்தை பெத்துட்டு உன்னை தூக்கி எறிவேன்…” கணவரை பழிவாங்க 3 வயது மகனை சித்திரவதை செய்த தாய்…. இணையத்தில் தீயாய் பரவும் சர்ச்சை வீடியோ….!!

ரஷியாவில் 31 வயதான தாய் ஒருவர், தனது சொந்தச் சிறுவனிடம் "உன் தந்தை உன்னை விட்டுவிட்டு வேறு பெண்ணுடன் சென்றுவிட்டார்.…

57 minutes ago